(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, September 4, 2016

ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா நிறைவு!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா சனிக்கிழமை நிறைவடைந்தது.

சந்தனக்கூடு திருவிழா கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழா நிறைவு பெறுவதை முன்னிட்டு, சனிக்கிழமை மாலை கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் தமிழகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.


ராமநாதபுரம் எஸ்.பி.மணிவண்ணன் உத்தரவின் பேரில் கீழக்கரை டி.எஸ்.பி. மகேசுவரி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment