(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, September 25, 2016

ராமநாதபுரத்தில் செப்.28ஆம் தேதி மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரத்தில் செப்.28ஆம் தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர்(பொறுப்பு)எம்.ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மின்பகிர்மான கோட்ட அலுவலகத்தில் செப். 28ஆம் தேதி காலை 11 மணிக்கு மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. 


இக்கூட்டத்தில் மின்நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவித்து பயன் பெறலாம். செப். 22ஆம் தேதி ராமநாதபுரம் மின்பகிர்மான வட்டத்தில் 27 உதவி மின் பொறியாளர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் இடம் பெற்றுள்ள மின்திருட்டு தடுப்புக் குழுவினரும் இணைந்து ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் கூட்டாக மின் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் சில மின்திருட்டுகளும் கண்டறியப்பட்டது. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட நபர்களிடமிருந்து சமரசத் தொகையாக ரூ.2 ஆயிரமும், இழப்பீட்டுத் தொகை ரூ.3,648ம் வசூல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment