Thursday, September 29, 2016
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 799 பேர் வேட்பு மனு தாக்கல்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 799 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் வேட்பு மனு
தாக்கல் செய்ய 3ஆவது நாளான
புதன்கிழமை
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்
பதவிக்கு 22 பேரும்,
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள்
170க்கு 8 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
429 ஊராட்சி மன்ற
தலைவர்கள் பதவிக்கு இதுவரை
139 பேர் மட்டும் வேட்பு
மனு தாக்கல் செய்துள்ளனர்.
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்
மொத்தம் 3,075 பேருக்கு
இதுவுரை 616 பேரும், நகர்மன்ற உறுப்பினர் 111 பேருக்கு இதுவரை இருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல்
செய்துள்ளனர்.
பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் 108 பேருக்கு இதுவரை 22 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர்.
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மொத்தம் 3,910
பதவிகளுக்கு கடந்த 3 நாள்களில் மட்டும் 799 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
Wednesday, September 28, 2016
தமிழ்நாடு வேர்ஹவுசிங் கார்ப்பரேசனில் பணியிடங்கள்!
சென்னையில் உள்ள வேர்ஹவுசிங் கார்ப்பரேசன் நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி மற்றும் அசிஸ்டென்ட் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: பொதுப்பிரிவு மேனேஜ்மென்ட் டிரெய்னி
பணியிடங்கள் : 37
வயது வரம்பு : 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி ; எம்.பி.ஏ. (பெர்சானல் மேனேஜ்மென்ட், மார்கெட்டிங், ஐ.ஆர் அல்லது எச்.ஆர் பிரிவில் படித்திருக்க வேண்டும்)
பணியின் பெயர் : டெக்னிக்கல் பிரிவு மேனேஜ்மென்ட்
பணியிடங்கள் : 6
வயது வரம்பு : 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :அக்ரிகல்ச்சர், பயோ கெமிஸ்ட்ரி, உயிரியல், எண்டமாலஜி ஆகியவற்றில் ஏதாவது ஒரு துறையில் முதுகலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
பணியின் பெயர் : சிவில் அசிஸ்டென்ட் இன்ஜினியரிங்.
பணியிடங்கள் : 15.
வயது வரம்பு : 3௦ வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : சிவில் இன்ஜினியரிங்.
-----------------------------------------------------------------------
பணியின் பெயர் : சூப்பர் அசிஸ்டென்ட்.
பணியிடங்கள் : 13௦
வயது வரம்பு :3௦ வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
-------------------------------------------------------------------------
பணியின் பெயர் : டெக்னிக்கல் அசிஸ்டென்ட்.
பணியிடங்கள் : 300
வயது வரம்பு : 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : அக்ரிகல்சர், பயோ கெமிஸ்ட்ரி, உயிரியல், எண்டமாலஜி ஆகியவற்றில் ஏதாவது ஒரு துறையில் முதுகலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்
-----------------------------------------------------------------------------------
பணியின் பெயர்: ஸ்டெனோகிராபர்.
பணியிடங்கள் : 8
வயது வரம்பு : 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.
-------------------------------------------------------------------------------
தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.400/-
கடைசித் தேதி : 13/1௦2௦16
மேலும் விவரங்களுக்கு: (www.tnwc.in/) என்ற முகவரியைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
Tuesday, September 27, 2016
குவைத்தில் மாபெரும் இஸ்லாமிய சமூக / கல்வி / இலக்கிய மாநாடு!!
குவைத்தில் முதல் முறையாக "குவைத் தமிழ் இஸ்லாமியச்
சங்கம் (K-Tic)"
ஏற்பாடு செய்யும்
"மாபெரும்
இஸ்லாமிய சமூக / கல்வி / இலக்கிய மாநாடு"
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் நாள் 40 பேர் வேட்பு மனு தாக்கல்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சித்
தேர்தல் வேட்பு மனு தாக்கல் முதல் நாளான திங்கள்கிழமை 40 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோர் திங்கள்கிழமை முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் 11 ஊராட்சி
ஒன்றியங்களுக்கு 170 வார்டு
உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
முதல் நாளான திங்கள்கிழமை தேசியவாத காங்கிரஸ்
கட்சியின் மாவட்டத் தலைவர் அன்பு பகுருதீன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தேவிபட்டினம் பகுதி கவுன்சிலராகவும் இருந்து வரும் இவர், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணனிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இவர் ஒருவர் மட்டுமே ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளார்.கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மொத்தம் 3075 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
தேவிபட்டினம் பகுதி கவுன்சிலராகவும் இருந்து வரும் இவர், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணனிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இவர் ஒருவர் மட்டுமே ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளார்.கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மொத்தம் 3075 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
முதல்
நாளான திங்கள்கிழமை வார்டு உறுப்பினர் பதவிக்கு 39 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். 3910
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்வு
செய்யப்பட வேண்டியுள்ள நிலையில் முதல் நாளான திங்கள்கிழமை 40 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் அருகே பல்லுயிர் பரவல் பூங்கா திறப்பு!!
ராமநாதபுரம் அருகே பட்டினம் காத்தான்
வேல்நகரில் கோல்டன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் புதுப்பிக்கப்பட்ட ஊரணியில்
பல்லுயிர் பரவல் பூங்கா அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
விழாவிற்கு கோல்டன் ரோட்டரி சங்கத் தலைவர் லெ.செந்தில்குமார் தலைமை வகித்தார்.சங்கம் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பல்லுயிர் பரவல் பூங்காவை ராமநாதபுரம் ஏ.எஸ்.பி.எஸ்.சர்வேஷ்ராஜ் திறந்து வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன், ரோட்டரி மாவட்ட ஆளுநர் கே.விஜயகுமார் மரக்கன்றுகளை நட்டனர்.
சங்க மாவட்ட ஆளுநர்(தேர்வு)டாக்டர்.ஏ.சின்னத்துரை
அப்துல்லா மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்தார். ரோட்டரி சங்க
பட்டயத் தலைவர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி, சங்க துணை ஆளுநர் பி.என்.சந்திரன் ஆகியோர் பல்லுயிர் பரவல்
பூங்காவில் 148 அரியவகை மூலிகை
மரங்கள் நடப்பட்டிருப்பதாகவும் அவற்றின் மகத்துவம் குறித்தும் பேசினர்.
முன்னதாக
விழாவுக்கு, திட்ட
ஒருங்கிணைப்பாளர்கள் ம.ஆத்மா கார்த்திக், அரு,சுப்பிரமணியன், விதைகள் அமைப்பின் தலைவர் அ.ஜெயமுரளி, வர்த்தக சங்கத் தலைவர் பா.ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை
வகித்தனர். கோல்டன் ரோட்டரி சங்க செயலாளர் ஹ.மணிகண்டன் வரவேற்றார்.
விழாவில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் அண்ணன் மகன் ஷேக் சலீம், வழக்குரைஞர்கள் பி.முனியசாமி, சோமசுந்தரம், தொழிலதிபர் ரமணா காந்தி, பாம்பன்பாலா, பாலச்சந்தர், சாத்தையா, கவிஞர் மாணிக்கவாசகம், பா.ஜ.க.மாவட்டத் தலைவர் முரளீதரன், கல்வி ஆலோசகர் சங்கரலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
Sunday, September 25, 2016
அக்டோபர் 17 மற்றும் 19-ந் தேதிகளில் தமிழக உள்ளாட்சி தேர்தல்!!
தமிழக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக அக்டோபர் 17
மற்றும் 19-ந் தேதிகளில் நடைபெறும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 21-ந் தேதியன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கான பதவி காலம் வரும் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைகிறது.
தமிழ்நாட்டில்,
12
மாநகராட்சிகள்,
124
நகராட்சிகள்,
31
மாவட்ட பஞ்சாயத்துகள்,
385
பஞ்சாயத்து யூனியன்கள்,
528
பேரூராட்சிகள்,
12,524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன
அனைத்து மாநகராட்சிகளிலும் 919 வார்டுகள், நகராட்சிகளில் 3,613 வார்டுகள், பேரூராட்சிகளில் 8,288 வார்டுகள், மாவட்ட பஞ்சாயத்துகளில் 655 வார்டுகள், பஞ்சாயத்து யூனியன்களில் 6,471 வார்டுகள், கிராம பஞ்சாயத்து வார்டுகள் 99,324 என மொத்தம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 399 பதவிகள் உள்ளன. இந்த முறை வார்டு கவுன்சிலர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு மட்டும் நேரடித் தேர்தல் நடக்கிறது. மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் ஆகியோர் கவுன்சிலர்கள் மூலம் மறைமுகமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கான சட்ட திருத்த மசோதா சட்டசபையில் ஏற்கனவே நிறைவேறியது.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில்
மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மாநில தேர்தல் ஆணையர்
சீத்தாராமன் மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பெண்களுக்கான 50% இடஒதுக்கீடு இடங்கள் எவை எவை என்ற பட்டியல் அரசாணையாக வெளியிடப்பட்டது. இந்த
நிலையில் இன்று மாலை உள்ளாட்சி தேர்தல்களுக்கான தேர்தல் தேதியை மாநில தேர்தல்
ஆணையர் சீத்தாராமன் அறிவித்தார்.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் 2
கட்டமாக நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்
நாளை தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் அக்.3-ந் தேதியாகும். 2
கட்டமாக பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அக்டோபர் 21-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மொத்தம் 91,098 வாக்குச் சாவடிகளில்
வாக்குப் பதிவு நடைபெறும். முதல் கட்டமாக அக்டோபர் 17-ந் தேதியன்று 10
மாநகராட்சிகளுக்கும் திண்டுக்கல், சென்னை மாநகராட்சிகளுக்கு அக்டோபர் 19-ந் தேதியன்று
தேர்தல் நடத்தப்படும். தேர்தல் நடத்தை விதி முறைகள் உடனே அமலுக்கு வந்துள்ளன.
இத்தேர்தலில் மொத்தம் 5
கோடியே 80 லட்சம் வாக்காளர்கள்
வாக்களிக்க உள்ளனர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
துபாய் சுகாதாரத்துறையில் ADMIN ASSISTANT பணி வாய்ப்பு!!
துபாய் சுகாதாரத்துறையில் ADMIN ASSISTANT பணி வாய்ப்பு!!
Title
ADMIN ASSISTANT
Category
Administration
Description
DHA - Medical Fitness
Services Department is currently looking for candidates to fill the post of
Admin Assistant.
Minimum requirements below:
- Graduated High School/Secondary Education with at least 1 year expeirence doing the same
- Graduated Diploma/Bachelors Degree in any course, no experience necessary
விண்ணப்பிக்க இங்கு க்ளிக் செய்யவும்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரத்தில் செப்.28ஆம் தேதி மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்!!
ராமநாதபுரத்தில் செப்.28ஆம் தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
நடைபெறவுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர்(பொறுப்பு)எம்.ஜோசப் செல்வராஜ்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மின்பகிர்மான கோட்ட அலுவலகத்தில் செப். 28ஆம் தேதி காலை 11 மணிக்கு மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் மின்நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.
செப். 22ஆம் தேதி
ராமநாதபுரம் மின்பகிர்மான வட்டத்தில் 27 உதவி மின் பொறியாளர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் இடம்
பெற்றுள்ள மின்திருட்டு தடுப்புக் குழுவினரும் இணைந்து ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில்
கூட்டாக மின் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் சில மின்திருட்டுகளும் கண்டறியப்பட்டது.
அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட நபர்களிடமிருந்து சமரசத் தொகையாக ரூ.2 ஆயிரமும், இழப்பீட்டுத் தொகை ரூ.3,648ம் வசூல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று 25-செப்டம்பர் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாம்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை
வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாம் நடைபெறுவதாக மாவட்ட
ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த 1.1.2017 ஆம் தேதி வரை 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது
பெயர்களை சேர்த்துக் கொள்ள ஏதுவாகவும், பெயர் திருத்தம் செய்தல், நீக்கம் செய்தல், இடம் மாறுதல் போன்றவற்றிற்கு வட்டாட்சியர் அலுவலகம் அல்லது
நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வாக்காளர் பட்டியலை
செம்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் பட்டியல்
சுருக்க திருத்த சிறப்பு முகாம் 2ஆவது கட்டமாக நடத்தப்படுகிறது.
மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள
பொதுமக்கள் தங்களது பகுதியிலுள்ள வாக்குச்சாவடி மையத்தில் உரிய விண்ணப்பங்களை
பெற்று தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ளுதல், பெயர் திருத்தம் செய்தல், நீக்கம் செய்தல், குடியிருப்பு மாறியவர்கள் ஆகியனவற்றிற்கு இந்த முகாமை பயன்படுத்திக்
கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
Saturday, September 24, 2016
கீழக்கரையில் மாதக்கணக்கில் தார் ஊற்றாமல் கிடப்பில் போடப்பட்ட சாலைகள்!!
கீழக்கரையில் மாதக்கணக்கில் தார் ஊற்றாமல் கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகளால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.
கீழக்கரையில் கடந்த 2 மாதங்களாக ரூ.5 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகள் பல தெருக்களில் நடந்து வருகிறது.
இந்த சாலைகளை விதிமுறைகளுக்கு முரணாக பெயரளவில் இயந்திரம் மூலம் தோண்டிவிட்டு மணல் கலந்த ஜல்லிகற்களை உடைக்கப்பட்ட ரோட்டின் மேல் பரப்பிவிட்டு ரோடு போடும் உருளை மெஷினை வைத்து அழுத்தம் செய்துவிட்டு மாதக்கணக்கில் தார் ஊற்றாமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
இதனால் வடக்குத்தெரு, தெற்குத்தெரு, அன்புநகர் உள்ளிட்ட பல ரோடுகளில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இச்சாலையில் கற்கள் சிதறி கிடப்பதால் வாகனங்களின் டயர்கள் பஞ்சராகியும், இலகுவான டயர்கள் வெடித்தும் வருகிறது.
மேலும் இச்சாலையில் வாகனங்கள் தடுமாற்றத்துடன் செல்வதால் தூசிகள் பறந்து மாசு அடைந்து இச்சாலையில் செல்வோர்க்கு ஒவ்வாமை நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பிற்கு முன் மாதக்கணக்கில் கிடப்பில் போடப்பட்ட சாலைகளுக்கு தார்களை ஊற்றி முழுமையாக பணிகளை முடிக்குமாறு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)