(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, August 14, 2016

ராமநாதபுரத்தில் TNPSC குரூப்-4 போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி!!

No comments :

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள குரூப்-4 போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், செப்டம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளதாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள குரூப்-4 போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.


இப்பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய பெயர் மற்றும் முகவரியை, ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம்.

பதிவு செய்தவர்கள் மட்டுமே செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.

செய்தி: தினசரிகள்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment