Tuesday, June 21, 2016
ராமேசுவரம்- பாலக்காடு பகல்நேர ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை!!
ராமேசுவரத்தில் இருந்து பொள்ளாச்சி வழியாக
பாலக்காடு வரை பகல்நேரத்தில் இயக்கப்பட்ட ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என
பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீட்டர் கேஜ் பாதை இருந்த போது
ராமேசுவரத்தில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் ரயில் பொள்ளாச்சி வழியாக கோவை, பாலக்காடு சென்று வந்தது. அகல ரயில்பாதை
அமைக்கப்பட்டு பல வழித்தடங்களில் போக்குவரத்து தொடங்கியபின்னும், இந்த ரயில் மீண்டும் இயக்கப்படவில்லை.
இந்த ரயிலை மீண்டும் இயக்கினால்
ராமேசுவரத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு ஆகிய
பகுதிகளுக்கு நேரடியாகச் செல்ல முடியும்.
எனவே இந்த ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment