Sunday, June 19, 2016
கீழக்கரை - ஏர்வாடி சாலையில் கோர விபத்து, நான்கு இளந்தளிர்கள் இறப்பு!!
கீழக்கரை to ஏர்வாடி ரோட்டில் நான்கு இளந்தளிர்களான இளைஞர்கள்
வாகன விபத்தில் மரணம் நெஞ்சை பிழியும் துயரச் செய்தி....
பெயர் விபரம்
1. செய்யது இப்றாஹிம்
2. அப்துல் ரஹ்மான்
3. ஃபாஹீத்
4. ராசீக்
2. அப்துல் ரஹ்மான்
3. ஃபாஹீத்
4. ராசீக்
பெற்ற பிள்ளைகளை
பறிகொடுத்து தாங்க முடியாத வேதனையில் உள்ள அந்த பெற்றோர்களுக்கு ஆறுதல் கூற
வார்த்தைகள் இல்லை,
யா அல்லாஹ் அவர்களுக்கு பொறுமையை கொடுப்பாயாக ஆமீன்..
கீழக்கரையில்
சிறுவர்களுக்கு பைக் வாங்கிக் கொடுப்பதை தயவு செய்து நிறுத்திக்கொள்ளுமாறு
பெற்றோர்கள் அனைவரையும் மிகத்தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக்கொள்கின்றேன்
சிறுவர்கள்
அதிவேகமாக பைக்கில் சென்று விபத்தில் சிக்குவதும் அதில் சிலர் மரனமடைவதும் சமீப
காலமாக நமதூரில் அதிகரித்து விட்டது
பள்ளி செல்லும்
சிறுவர்களுக்கு அதிவேக பைக்கை வாங்கிக் கொடுப்பது என்பது ஒரு தேவை அற்றச் செயல்,
அது அவர்களுக்கு ஒரு நன்மையையும் கொடுக்கப் போவதில்லை,
மாறாக நம் பிள்ளைகளுக்கு அது ஆபத்தே,
இன்று நடந்த
விபத்தில் வாழவேண்டிய நான்கு அப்பாவி சிறுவர்கள் மரனித்தது என்பது மிக உச்சம்,
இது போன்ற
விபத்து இதுவரை நிகழ்ந்தது இல்லை நம் ஊரில்
அந்த நான்கு
சிறுவர்களும் அடிபட்டு கிடந்த அந்த கொடூரக்காட்சி நம் மனதை மிகவும் வேதனையில்
ஆழ்த்திவிட்டது.
இது ஒரு
தொடர்கதையாய் தொடராதிருக்கச் செய்வது பெற்றோர்களாகிய நம் கைகளில் தான் உள்ளது.
இந்த சிறுவர்களுக்காகவும்
அவர்களின் குடும்பத்தினர்களுக்காகவும் துஆ செய்வோம்.
-ஜமால்
இப்ராஹீம்
கீழக்காரை
No comments :
Post a Comment