Sunday, May 8, 2016
தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இராமநாதபுரத்தில் திரு. ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!!
ராமநாதபுரம் அண்ணா சிலை முன்பு
ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. பொருளாளர்
ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தின் முதல் அமச்சர் ஜெயலலிதா
பொறுப்பேற்று 5 ஆண்டுகளில்
எப்போதாவது இங்கு வந்து இருக்கிறாரா நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு சொகுசு
பங்களாவுக்கு தான் அடிக்கடி சென்று வந்துள்ளார்.
நாட்டை பற்றி மக்களை பற்றி சிந்திக்க
முடியாத நிலையில் ஜெயலலிதா இருக்கிறார். பாவத்தை போக்கக் கூடிய ராமேசுவரம் இந்த
மாவட்டத்தில் தான் உள்ளது. தமிழகத்தை பிடித்துக் கொண்டு இருக்கும் சாபத்தை
போக்குவதற்கு இங்கு வந்துள்ளேன்.
5 ஆண்டு காலம்
ஆட்சியில் இருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ., உள்பட அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் வாக்குகள் சேகரிக்க மக்களிடம்
நேரடியாக செல்ல முடியாத நிலையில் உள்ளனர். உங்களை பார்க்க தெம்போடு, துணிச்சலுடன், இறுமாப்புடன் ,கொஞ்சம் திமிரோடு வந்து இருக்கிறேன். ஏனென்றால் குடிநீர்
பஞ்சம் தலைவிரித்தாடிய மாவட்டமாக பேசப்பட்டு வந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் 2006ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் ரூ.616
கோடி செலவில் ராமநாதபுரம் குடிநீர்
திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தை குறிப்பிட்ட நாளில் மக்களின்
பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததால் கருணாநிதியிடம் தங்க பதக்கம் பரிசாக பெற்றேன்.
கிருஷ்ணகிரி. தர்மபுரி மாவட்ட மக்களின்
தாகத்தை தீர்க்கும் வகையில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ஒகனேக்கல கூட்டு குடிநீர்
திட்டம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. கொண்டு வநத திட்டம் என்பதற்காக இந்த
திட்டத்தையும் அ.தி.மு.க. அரசு சின்னா பின்னாமாக்கி விட்டனர். தி.மு.க. தலைவர்
கருணாநிதி முதல்வராக பதவியேற்றதும் 20 நாட்களுக்கள் இந்த திட்டம் முறையாக செயல்பட நடவடிக்கை
எடுக்கப்படும்.
அதானி குழுமத்துடன் அ.தி.மு.க. அரசு
மிகப் பெரிய ஒப்பந்தத்தை போட்டுள்ளது. ரூ. 5436 கோடி மதிப்பீட்டில் சூரிய மின் திட்டம் நிறைவேற்ற போவதாக
கூறி திட்டம் போட்டு ஏழை.எளிய மக்களின் நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்குகின்றனர்.
நிலத்தை கையகப்படுத்த மாவட்ட அதிகாரிகள் புரோக்கர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
வெளி மாநிலங்களில் சூரிய ஒளி மின்சாரத்தை ரூ.5.40 கொடுத்து வாங்குகின்றனர். ஆனால் அதானி குழமத்திடமிருந்து ரூ
7.01 வாங்குகின்றனர்.
இதனால் தமிழக மின்வாரியத்திற்கு ஆண்டுக்கு ரூ.23 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படுகிறது. இதில் பல கோடி ரூபாய்
லஞ்சம் பெற்றுள்ளனர்.
110 விதியை
பயன்படுத்தி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அறிவித்த திட்டங்கள் எதுவும்
நிறைவேற்றப்படவில்லை. ஜெயலலிதா மேடைகளில் பொய் பிரசாரம் செய்து வருகிறார்.
மீனவர்களின் பிரச்னை இந்த 5 ஆண்டுகளில்
தலைவிரித்தாடுகிறது.
அ.தி.மு.க. ஆட்சிக்க வந்த பின் 2011-ம் ஆண்டு 222பேர், ,2012-219பேர், 2013-645பேர், 2014-787பேர், 2015-151 பேர் ஆக மொத்தம் 2024 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 400க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளது. 95 க்கும் மேற்பட்ட
படகுகள் இலங்கையில் உள்ளது.18 படகுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் உள்ள 37
எம்.பி.க்கள் இது குறித்து பேசியது
கிடையாது. இலங்கை
மீனவர்களும், தமிழக மீனவர்கம்
சோந்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சிக்கு
முட்டுக்கட்டை போட்ட ஆட்சி அ;.தி.மு.க என்பதை மறந்து விடக்கூடாது.
வரலாற்று சிறப்பு மிக்க தேர்தல்
அறிக்கையை தி.மு.க வெளியிட்டுள்ளது. 2016-ம் ஆண்டு தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை சூப்பர்
ஹீரோ. இந்த தேர்தல் அறிக்கையை பார்த்ததும் ஜெயலலிதாவுக்கு அச்சம் வந்து வ்ட்டது.. தி.மு.க. தேர்தல் அறிக்கை புத்தகத்தில்
அ.தி.மு.க. ஸ்டிக்கரை ஒட்டி அ.தி.மு.கவினர் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 5 ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் 50
ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டோம்.
மேலும் பரமக்குடி,
,ராமநாதபுரம், கீழக்கரை பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டம்
நிறைவேற்றப்படும், ராமநாதபுரத்தில்
மருத்துவ கல்லூரி, முதுகுளத்தூரில்
பொறியியல் கல்லூரி, காவேரி குண்டாறு
திட்டங்களும் நிறைவேற்றப்படும். கமுதி மலட்டாறில் தடுப்பனை கட்டப்படும், ஏர்வாடியில் மனநல கப்பாகம் கட்டப்படும் உள்ளிட்ட
மாவட்டத்திற்கு தகுந்த பல்வேறு திட்டங்கள் தேர்தல் அறிக்கைகளாக கருணாநிதி
அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை ஜெயலலிதா எனும் வில்லியிடம்
இருந்து காப்பாற்றும் தேர்தல் அறிக்கை தான் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன்
தலைலை வகித்தார். தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் ஜவாஹிருல்லா(ராமநாதபுரம்),
திவாகரன் (திருவாடானை),
திசைவீரன்(பரமக்குடி)
மலேசியா பாண்டியன் (முதுகுளத்தூர்),
முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, பொன்.முத்துராமலிங்கம், முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்தின், மாவட்ட காங். தலைவர் குட்லக் ராஜேந்திரன் உள்பட
கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி: திரு. அஸ்கர் அலி, திமுக, வண்ணாங்குண்டு
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment