Tuesday, May 24, 2016
ஏர்வாடியில் இலவச கழிவறை கட்ட பொதுமக்கள் கோரிக்கை!!
ஏர்வாடியில் இலவச கழிவறை கட்ட வேண்டும் என பொதுமக்கள்
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஏர்வாடியில் சுல்தான் செய்யது இபுராகீம் பாதுசா நாயகம் அடக்கஸ்தலம் தர்ஹா உள்ளது. இதனால், இங்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து யாத்ரீகர்கள் சாதி, மத, இன வேறுபாடின்றி வந்து செல்கின்றனர்.
இவர்களுக்கு ஏர்வாடி தர்கா எதிரே இலவச கழிவறை மற்றும் குளியலறை இருந்து வந்தது. தவிர்க்க முடியாத சில காரணங்களைக்கூறி இந்த கழிவறை இடிக்கப்பட்டது. தற்போது ஏர்வாடியில் இலவச கழிவறை மற்றும் குளியலறை இல்லாததால் தர்காவிற்கு வரும் யாத்ரீகர்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.
இந்த நிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்ட லாட்ஜ் உரிமையாளர்கள் அடிப்படை தேவைகளை மட்டும் நிறைவேற்ற கட்டணம் வசூலிக்காமல் தங்குவதற்கான கட்டணமாக வசூலிக்கின்றனர். வசதியின்மையாலும், கட்டணம் அதிகம் என்பதாலும் பஸ், வேன் ஆகியவற்றில் கூட்டமாக வரும் யாத்ரீகர்கள், சாலையோரங்களிலும் தர்கா அருகிலும் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, கடந்த பல ஆண்டுகளாக ஏர்வாடி தர்கா எதிரே மக்களுக்கு மிகவும் வசதியாக இருந்த இலவச கழிவறை மற்றும் குளியலறையை மீண்டும் கட்ட வேண்டும் என யாத்ரீகர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தி: தினகரன்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment