Wednesday, May 4, 2016
இராமேஸ்வர கோவிலின் சன்னதி தெரு, ரத வீதி நடை பாதைகளில் மேற்கூரை அமைக்க கோரிக்கை!!
கடும் வெயிலின் தாக்கத்தால் நடந்து செல்ல முடியாமல்
தவிக்கும் ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோவிலின் சன்னதி தெரு,
ரத வீதி நடை பாதைகளில் மேற்கூரை அமைக்க கோரிக்கை
விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இன்று முதல் அக்னி நட்சத்திரம்
தொடங்குகிறது. ஆனால் கடந்த 1 மாதத்திற்கு முன்னதாகவே
தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. இதேபோல்
ராமநாதபுரம் மாவட்டத்திலும் ராமேசுவரம் பகுதியிலும் கடந்த 1 மாதத்திற்கு மேலாகவே வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகின்றது.
அது போல கடும் வெயிலின் தாக்கத்தால் ராமேசுவரம் கோவிலுக்கு
வரும் பெண்,
வயதான பக்தர்கள், குழந்தைகளுடன் ரத
வீதிகளில் நடந்து செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். தற்சமயம்
கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ரத வீதிகளில் கடந்த சில வாரங்களாக தினமும்
பகல் 12 மணிக்கு லாரி மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் கடும் வெப்பத்தால் நடந்து செல்ல முடியாமல் தவித்து
வந்த பக்தர்கள் ரத வீதிகளில் லாரி மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்ட பின்பு மிகுந்த
மகிழ்ச்சியுடன் நடந்து சென்றனர். இருப்பினும் லாரி மூலம் தெளிக்கப்படும் தண்ணீர்
சில மணி நேரத்திலேயே முழுமையாக காயந்து விடுவதுடன், மீண்டும் வழக்கமான வெயிலின் தாக்கத்தால் ரத வீதிகளின் சாலைகள்அனலாக இருந்து
வருகிறது.
எனவே அக்னி நட்சத்திரம் மற்றும் கோடை வெயில் முடிவடையும்
வரையிலாவது கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அக்னி தீர்த்த கடலில் நீராடி, கோவிலில் உள்ள 22
தீர்த்த கிணறுகளில் நீராட வரும் பக்தர்கள் சன்னதி தெரு, மற்றும் 4
ரத வீதிகளின் நடை பாதையிலும் முழுமையான மேற்கூரைகள்
அமைப்பதற்கும்,
குடி தண்ணீர் வசதிகள் செய்ய திருக்கோவில் நிர்வாகம்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment