Tuesday, May 10, 2016
பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியில் சரி செய்யப்படுமா மின் நிலைமை?!!
பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியில்
சரி செய்யப்படுமா
மின் நிலைமை?
பரமக்குடி எமனேஸ்வரம் முழுக்க கடந்த 10
நாட்களாகவே இரவு 8 மணியிலிருந்து
குறைந்த அழுத்த (Low voltage) மின்விநியோகம்...
கொளுத்தும் கோடை வெயில் காலத்தில் நிம்மதியாக இரவு பொழுதில் உறங்கச்
செல்ல மின்விசிறியையோ,
குளிரூட்டியையோ (A/C) பயன்படுத்திட இயலா
அவதியில் எமனேஸ்வரம் மக்களது வேதனை தீர்ப்பதற்கு நடவடிக்கை
தேவை.
பரமக்குடி மின் வாரியம் விரைந்து நடவடிக்கை எடுத்திட 04564-225696 என்ற
எண்ணிற்கு தொடர்பு கொண்டால் பதிலளிப்போர் யாருமிலர்...
தமிழ்நாடு மின்மிகை மாநிலமென்றும், மின் தேவையில்
தன்னிறைவு பெற்ற மாநிலமென்றும் ஆட்சியர்கள் சொல்வதை உண்மைபடுத்துவார்களா மின்வாரிய அதிகாரிகள்...?
அ.சேக் அப்துல்லா
இராமநாதபுரம்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment