(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, May 17, 2016

பிளஸ்2 தேர்வில் கிருஷ்ணகிரி மாணவி ஆர்த்தி மற்றும் திருவள்ளூர் ஜஸ்வந்த் ஆகியோர் முதலிடம்!!

No comments :
பிளஸ்தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி மாணவி ஆர்த்தி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த ஜஸ்வந்த் ஆகியோர் தலா 1195 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.  

மாணவி ஆர்த்தி பாடம் வாரியாக எடுத்து மதிப்பெண்கள்

தமிழ் - 199
ஆங்கிலம் - 197
கணிதம் - 200 
இயற்பியல் - 199 
வேதியியல் - 200
உயிரியல் - 200

மாணவர் ஜஸ்வந்த் பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண்கள்

தமிழ் - 199
ஆங்கிலம் - 197
கணிதம் - 200 
இயற்பியல் - 199 
வேதியியல் - 200
உயிரியல் - 200




2
வது இடம்

திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளியை சேர்ந்த மாணவி பவித்ரா 1194 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

3
வது இடம்

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.கே.வி. மேல்நிலைப் பள்ளி மாணவி வேணு பிரீத்தா 1193 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தை பிடித்துள்ளார்.  

200
க்கு 200 மதிப்பெண் எடுத்த மாணவர்கள்

வணிகவியல் பாடத்தில் 3084 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 303 பேரும், கணக்கு பதிவியல் பாடத்தில் 4341 பேரும், வணிகக் கணிதத்தில் 1072 பேரும், கணிதப் பாடத்தில் 3361 பேரும், தாவரவியல் பாடத்தில் 20 பேரும், விலங்கியல் பாடத்தில் 10 பேரும், உயிரியல் பாடத்தில் 775 பேரும், வேதியியல் பாடத்தில் 1703 பேரும், இயற்பியல் பாடத்தில் 5 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம்

பிளஸ் 2 தேர்வில் 94.4 சதவீதம் மாணவிகளும், 87.9 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ்2 தேர்வு எழுதிய மாணவிகளில் 4,19,794 பேரும், மாணவர்களில் 3,41,931 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

வாழ்த்துக்கள் மாணவ செல்வங்களே!!

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment