(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, May 16, 2016

கோ 2 - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
தமிழ் சினிமாவில் அரசியல் சார்ந்து பல படங்கள் வந்துள்ளது. இதில் அமைதிப்படை, முதல்வன், கோ என ஒரு சில படங்களே நிகழ்கால அரசியலை தைரியமாக மக்களுக்கு கூறிய படம்.

இதில் கோ கடந்த தேர்தலின் போது வெளிவந்து மிகப்பெரும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் தொடர்சியாக இந்த தேர்தலுக்கு கோ 2 வெளிவந்துள்ளது.கதைக்களம்கோ படத்திற்கும் இந்த படத்திற்கும் சம்மந்தமே இல்லை.

ஆனால், டைட்டில் வைத்ததற்காகவே சிறகுகள் கட்சி வீழ்ச்சியடைந்து மீண்டும் பிரகாஷ்ராஜ் முதல்வரானார் என்ற வசனம் வருகின்றது. அறிமுக இயக்குனர் சரத் இப்படத்தை இயக்கியுள்ளார்.பாபி சிம்ஹா படத்தின் ஆரம்பத்திலேயே தமிழகத்தின் முதலமைச்சர் பிரகாஷ்ராஜை கடத்துகிறார். தமிழகமே பதட்டமாக போலிஸ் படையுடன் பாபி இருக்கும் இடத்தை வந்து சேர்கிறது.உங்களுக்கு என்ன வேண்டும்? எதற்கு முதலமைச்சரை கடத்துனீர்கள்? என்று கேட்க, பாபி மிகவும் சிறுபிள்ளை தனமாக காரணங்களை சொல்கிறார்.



அது அரசாங்கத்திற்கு சிறுபிள்ளை தனமாக இருந்தாலும், பெரிய விஷயத்தை சிம்பிளாக பாபி சொல்ல முயற்சிக்கிறார்.இதை தொடர்ந்து பல திடுக்கிடும் உண்மைகளை பாபி முதலமைச்சரை தன் கட்டுப்பாட்டில் வைத்து வெளிக்கொண்டுவருவதே மீதிக்கதை.படத்தை பற்றிய அலசல்பாபி சிம்ஹா தேசிய விருது நாயகன், அழுத்தமான கதாபாத்திரத்தில் தான் நடிப்பார் என்று எதிர்ப்பார்த்தால் அவரும் கமர்ஷியலுக்குள் குதித்துவிட்டார். நாட்டில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களுக்கும் பெரிய காரணம் இருக்கு என்பதை முதலமைச்சரிடம் விளக்கும் காட்சியில் அப்லாஸ் அள்ளினாலும், ரொமான்ஸ், டூயட் எல்லாம் கொஞ்ச நாளைக்கு வேண்டாம் ப்ரோ.
பிரகாஷ்ராஜ் அவரே மொத்த படத்தையும் தாங்கி நிற்பார் என்று எதிர்ப்பார்த்தால், கொஞ்சம் ஏமாற்றம் தான். இத்தனை பெரிய நடிகரை ஒரு சேரில் உட்கார வைத்து பேச மட்டும் வைத்துவிட்டார்கள். நிக்கி கல்ராணியும் ஒரு ப்ளாஷ் பேக் டூயட், அவ்வப்போது மைக் பிடித்து பேசுகிறார், பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை.

முதலமைச்சரை கடத்த இவர்கள் போடும் ப்ளான் அதற்கு உதவி செய்யும் பாலசரவணன் என பல லாஜிக் மீறல்கள். அதிலும் பாலா சொல்லும் ப்ளாஷ்பேக் காட்சிகள் எல்லாம் படத்திற்கு தேவை தானா?.ஆனால், எது எப்படியோ பல காட்சிகள் பிரபல கட்சிகள் செய்யும் கலாட்டாவை வெளுத்து வாங்கியுள்ளது.

இதற்கு எல்லாம் தனி தைரியம் வரவேண்டும், அதற்காக மனம் திறந்து பாராட்டலாம். அதிலும் இளவரசு ஒரு அமைச்சரை நம் கண்முன் கொண்டு வருகிறார்.படத்தின் ரியல் ஹீரோ இசையமைப்பாளார் லியோன் தாமஸ் தான், பின்னணி பாடல்கள் என அனைத்திலும் கலக்கியுள்ளார். இன்னும் பல படங்கள் பணியாற்ற வாழ்த்துக்கள் சார்.கோ படத்தில் மக்களின் மொத்த பிரச்சனைக்கும் போராடுவது போல் இருக்கும், இதில் தனிப்பட்ட ஒருவரின் பிரச்சனையை வைத்து மையக்கதையை நகர்த்திருப்பது கொஞ்சம் யதார்த்தத்தை விட்டு தள்ளி நிற்கின்றது.


அரசாங்கத்திற்கு சாட்டையடி அதிலும் தேர்தல் நேரத்தில்.படத்தின் இசை, இரண்டாம் பாதி, கருணாகரன் முதன் முதலாக காமெடி தவிர்த்து சிறிது நேரம் வந்தாலும் ஈர்க்கிறார்.இளவரசு வாயிலாகவே அரசாங்கத்தை பற்றிய கிண்டல் கேளிகளை பாபி சிம்ஹா வெளியே கொண்டு வரும் காட்சி.


காமெடியை விட அனைவரும் கவனிக்கவேண்டிய இடம்.பல்ப்ஸ்படத்தின் முதல் பாதியில் வரும் தேவையற்ற ப்ளாஷ்பேக் காட்சிகள்.லாஜிக் மீறல்கள், முதலமைச்சரை கடத்துகிறார் என்று கூறும் போதே அத்தனை சீரியஸான விஷயத்தை இன்னும் கொஞ்சம் வேகமாக கொண்டு சென்றிருக்கலாம்.மொத்தத்தில் இதுவரை சினிமாவில் கூட கேட்க முடியாத சில கேள்விகளை முதன் முறையாக தைரியமாக கேட்டதற்காகவே ஒரு முறை சென்று வரலாம்.

விமர்சனம்: தமிழ் ஃபில்ம் நியூஸ்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment