(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, May 16, 2016

தேர்தல் திருவிழா - ராமநாதபுரம் மாவட்டத்தில் 11,01,418 வாக்காளர்கள், 68 வேட்பாளர்கள்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 11,01,418 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 1,307 வாக்குச்சாவடிகள் உள்ளன.

வாக்காளர்கள் தேர்தலில் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்தி துணைராணுவ பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.

தமிழகத்தில் இன்று (16–ந் தேதி) சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறகிறது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில்
ராமநாதபுரம்,
பரமக்குடி(தனி),
முதுகுளத்தூர்,
திருவாடானை

என 4 சட்டமன்ற தொகுதிகளில் இந்த தேர்தல் நடைபெறுகிறது.

மாவட்டத்தில் உள்ள மொத்தம் 4 சட்டமன்ற தொகுதிகளில்,
பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,22,050 ஆண் வாக்காளர்களும், 1,23,429 பெண் வாக்காளர்களும், 19 இதர வாக்காளர்களும், 480 பணித்தொகுதி வாக்காளர்களும் உள்ளனர்.

திருவாடானை சட்டமன்ற தொகுதியில் 1,37,440 ஆண் வாக்காளர்களும், 1,35,985 பெண் வாக்காளர்களும், 28 இதர வாக்காளர்களும், 191 பணித்தொகுதி வாக்காளர்களும் உள்ளனர்.

ராமநாதபுரம் தொகுதியில் 1,41,900 ஆண் வாக்காளர்களும், 1,42,412 பெண் வாக்காளர்களும், 18 இதர வாக்காளர்களும், 72 பணித்தொகுதி வாக்காளர்களும் உள்ளனர்.

முதுகுளத்தூர் தொகுதியில் 1,49,225 ஆண் வாக்காளர்களும், 1,47,680 பெண் வாக்காளர்களும், 8 இதர வாக்காளர்களும், 481 பணித்தொகுதி வாக்காளர்களும் உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் 5,50,615 ஆண் வாக்காளர்களும், 5,49,506 பெண் வாக்காளர்களும், 73 இதர வாக்காளர்களும், 1,224 பணித்தொகுதி வாக்காளர்களும் உள்ளனர்.

இவ்வாறு மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் மொத்தம் 11,01,418 வாக்காளர்கள் உள்ளனர்.



ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2–ந்தேதி அறிவிக்கப்பட்டுள்ள இறுதி வேட்பாளர்கள் பட்டியலின்படி மாவட்டத்தில் உள்ள
பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்களும்,
திருவாடானை தொகுதியில் 21 வேட்பாளர்களும்,
ராமநாதபுரம் தொகுதியில் 17 வேட்பாளர்களும்,
முதுகுளத்தூர் தொகுதியில் 15 வேட்பாளர்கள்

என மொத்தம் 68 வேட்பாளர்கள் களத்தில் நின்று போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவுக்காக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 1,307 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவுக்கு உள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளுக்கு சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வேட்பாளர்களின் எண்ணிக்கையின்படி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு 346,
திருவாடானை தொகுதிக்கு 738,
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு 738,
முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 419 என மொத்தம் 2,241 வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. 

அதேபோல, வாக்குப்பதிவு எந்திர கட்டுப்பாட்டுக் கருவிகள்,
பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு 346,
திருவாடானை தொகுதிக்கு 369,
ராமநாதபுரம் தொகுதிக்கு 369,
முதுகுளத்தூர் தொகுதிக்கு 419

என மொத்தம் 1,503 கட்டுப்பாட்டுக் கருவிகளும் அனுப்பப்பட்டு உள்ளன.

வாக்குப்பதிவை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்தும் வகையில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் உள்பட 3,342 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தேர்தலையொட்டி வாக்குப்பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

செய்தி: தினத்தந்தி



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment