Saturday, April 9, 2016
மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள்!!
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி
உளுந்தூர்பேட்டை,
ராமநாதபுரம்,
ஆம்பூர்,
நாகை,
தொண்டாமுத்தூர்
ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இணைந்துள்ளது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நேற்று மாலை நேரில் சந்தித்து பேசினார். அப்போது மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதையடுத்து இன்று மாலை சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது மனித நேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

மேலும் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் வரும் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment