Tuesday, April 19, 2016
பெங்களூரிலுள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள்!!
கர்நாடக மாநிலம் பெங்களூரிலுள்ள வேளாண் அறிவியல்
பல்கலைக்கழகத்தில் (யுஏஎஸ்) பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பேராசிரியர், நூலகர், இணை பேராசிரியர்,
உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் இங்கு
காலியாகவுள்ளன.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு
மே 16-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.
பேராசிரியர் பணியிடங்கள் 30-ம்,
இணை பேராசிரியர் பணியிடங்கள் 16-ம்,
நூலகர் பணியிடம் ஒன்றும்,
உதவி பேராசிரியர் பணியிடங்கள் 58-ம் காலியாகவுள்ளன.
தகுதியுள்ளவர்கள் தங்களது சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பங்களை
அனுப்பவேண்டும். அனைத்துப் பணியிட விண்ணப்பங்களுக்கும் கட்டணம் உண்டு.
நேர்முகத் தேர்வு மூலம் அனைத்துப் பணியிடங்களுக்கும் ஆட்கள்
தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்களை மே 16-ம் தேதிக்குள்
The
Administrative Officer,
University
of Agricultural Sciences,
GKVK,
Bengaluru:
560065
என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.
கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு http://www.uasbangalore.edu.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment