Tuesday, April 26, 2016
ராமநாதபுரம் மாவட்டத்தில் அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சியை கலெக்டர் நடராஜன் நேரில் ஆய்வு செய்தார்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி
அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் நடராஜன் நேரில்
பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி
அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட
பகுதிகளில் நடைபெற்றது. இதனை மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன் ஒவ்வொரு சட்டமன்ற
பகுதிக்கும் நேரடியாக சென்று பார்வையிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மின்னணு
வாக்குப்பதிவு எந்திரத்தை கையாளும் முறைகள் குறித்து விளக்கினார்.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான
பயிற்சியை தொடங்கி வைத்தார்.
அதன்பின் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி
கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, முதுகுளத்தூர் சட்டமன்ற
தொகுதிக்கு உட்பட்ட முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருவாடணை
சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பி.கே.மங்கலம் செயின்ட் பிரான்சிஸ் மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற அந்தந்த சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி
அலுவலர்களுக்கான பயிற்சியை நேரில் பார்வையிட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்
கையாளும் முறைகள் குறித்து விளக்கினார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் நடராஜன் கூறியதாவது:–
சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்குவதை
தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து
முன்னேற்பாடு பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில்
தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி
நடைபெறுகிறது.
பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 28 மண்டல அலுவலர்கள்,
644 வாக்குச்சாவடி அலுவலர்களும், திருவாடனை சட்டமன்ற தொகுதியில் 30 மண்டல அலுவலர்கள், 1,280 வாக்குச்சாவடி அலுவலர்களும், ராமநாதபுரம் சட்டமன்ற
தொகுதியில் 57
மண்டல அலுவலர்கள், 1,137 வாக்குச்சாவடி அலுவலர்களும், முதுகுளத்தூர் சட்டமன்ற
தொகுதியில் 35
மண்டல அலுவலர்கள், 1,891 வாக்குச்சாவடி அலுவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். தேர்தல் பணியில்
ஈடுபடும் மண்டல அலுவலர்களுக்கு முன்னதாக 3 கட்ட பயிற்சிகள்
வழங்கப்பட்டுஉள்ளன.
செய்தி:
தினத்தந்தி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment