(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, April 25, 2016

திமுக தேர்தல் அறிக்கையில் கீழக்கரைக்கு பாதாள சாக்கடை திட்டம், பொதுமக்கள் வரவேற்பு!!

No comments :
கீழக்கரைக்கு 2006-2011ம் ஆண்டு திமுக ஆட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அப்போதைய திமுக நகராட்சி தலைவர் பசீர்அகமது அதற்கான ஆய்வு பணிகளையும் முதற்கட்ட ஆயத்த பணிகளையும் மேற்கொண்டார். ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பாதாள சாக்கடை திட்டம் கிடப்பில் போடப்பட்டது.  தற்போது வரை இத்திட்டத்திற்கான எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வில்லை.


இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கையில் கீழக்கரை, பரமக்குடி, ராமேஸ்வரம் ஆகிய நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு கீழக்கரை பொதுமக்கள், சமூகநல ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

இது தொடர்பாக திமுக நகர செயலர் பசீர்அகமது கூறியதாவது, நகராட்சி தலைவராக நான் இருந்த போது வலியுறுத்தியதன் விளைவாக கீழக்கரைக்கு பாதாள சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக இத்திட்டத்தை கிடப்பில் போட்டதால், கீழக்கரை நகர் முழுவதும் கழிவுநீர் தெருக்களில் ஓடி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்தை பொதுமக்களுடன் சேர்ந்து திமுக.வினரும் வரவேற்கின்றனர் என்றார்.


செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment