(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, April 10, 2016

திருவாடானை தொகுதியில் பிரசாரத்தை தொடங்கினார் நடிகர் கருணாஸ்!!

No comments :
திருவாடானை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் நடிகர் கருணாஸ் சனிக்கிழமை தேர்தல் பிரசாரம் தொடங்கினார்.

திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனரும் நடிகருமான கருணாஸ் போட்டியிடுகிறார். அவர் சனிக்கிழமை திருவாடானை அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்துக்குச் சென்று சாமி கும்பிட்டார்.


அவருடன் மாவட்ட கவுன்சிலர் ஆணிமுத்து, முன்னாள் அமைச்சர் வது.நடராஜன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் கணேசன், ஒன்றிய துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் திருவாடானை சன்னதி தெருவில் உள்ள தேர்தல் அலுவலகத்துக்குச் சென்றனர். அந்த அலுவலகத்தை அன்வர்ராஜா எம்.பி திறந்து வைத்தார்.

பின்னர் வேட்பாளர் கருணாஸ் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இதில், அதிமுக அவைத் தலைவர் முருகன், திருவாடானை ஒன்றிய செயலாளர் மதிவாணன், ஒன்றிய குழு தலைவர் முனியம்மாள் ரஜேந்திரன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் செங்கை ராசு, வழக்குரைஞர் ராஜலிங்கம், ஜெயலலிதா பேரவை ஒன்றிய தலைவர் நெல்சன், பழயனக்கோட்டை பாண்டி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி: தினமணி



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment