Thursday, April 21, 2016
ராமநாதபுரம் மாவட்டத்தில் பணப் பட்டுவாடாவைத் தடுக்க 800 கண்காணிப்புக் குழுக்கள்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் பணப் பட்டுவாடாவைத் தடுக்க 800 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான எஸ்.நடராஜன் புதன்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியது:
ராமநாதபுரம்
மாவட்டத்தில் தேர்தலில் வாக்களிக்க பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க 800 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் கிராமங்கள் தோறும் சென்று
வாக்குக்கு பணம் வாங்கக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன்
பணப்பட்டுவாடா நடக்கிறதா என்பதையும் கண்காணிப்பார்கள்.
இக்குழுவில் நேருயுவகேந்திரா அமைப்பினர், ஆசிரியர்கள்,கிராம நிர்வாக அலுவலர்கள், வாக்குச்சாவடி மைய
அலுவலர்கள் ஆகியோரும் உள்ளனர். கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதிப்படி,
ராமநாதபுரம் மாவட்டத்தில் 10,84,817 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3406 போலி வாக்காளர்கள்
கண்டறியப்பட்டுள்ளனர்.
8881
பேர் இறந்துவிட்டது தெரியவந்து, பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் 1307 வாக்குச்சாவடிகள்
அமைக்கப்பட்டுள்ளன. இதில் 73
வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு அவற்றில்
தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்துபவர்கள் என கண்டறியப்பட்ட
334 பேர் மீது குற்றவியல் சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல்
நடத்தை விதிகளை மீறியதாக 82
புகார்கள் வரப்பட்டு அதில் 80 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டிருக்கின்றன. மேலும் இரு புகார்கள் மீது
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியர்.
பேட்டியின் போது ராமநாதபுரம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உடன் இருந்தார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment