(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, April 7, 2016

குரூப்- 2 ஏ பணிக்கு ஏப்.12, 13-ம் தேதிகளில் கலந்தாய்வு!!

No comments :

நேர்காணல் அல்லாத உதவியாளர், நேர்முக எழுத்தர் உள்ளிட்ட பணிகளில் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த 29.6.2014 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.


அதைத்தொடர்ந்து, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இதுவரை 3 கட்டங்களாக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.



இந்த நிலையில், எஞ்சியுள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில் 4-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஏப்ரல் 12, 13-ம் தேதிகளில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் மற்றும் துறைவாரியான காலியிடங்கள் பற்றிய விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment