Thursday, March 31, 2016
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களுக்காக புதிய எப்.எம்.!!
ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கடலில் ஏற்படும் மாற்றங்களை
தெரிந்துகொள்ளும் வகையில் கடல் ஒசை எப்.எம் புதிய வானொலி நிலையம் விரைவில்
திறக்கப்படவுள்ளது என தனியார் அறக்கட்டளை நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை
தெரிவித்தனர்.
இது குறித்து கடல் ஒசை எப்.எம் வானொலி நிலைய இயக்குநர்
ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறியது: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில்
நேசக்கரங்கள் தனியார் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில், கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்
வகையில் பல்வேறு நிகழச்சிகளை நடத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பயன் பெறும் வகையில் பாம்பன் பகுதியில்
கடல் ஒசை எப்,எம் வானொலி நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளது.
இந்த வானொலி மூலம் கடலில் ஏற்படும் சுனாமி, புயல்,
நீரோட்டம், கடல் சீற்றம் கடலில்
மீனவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை சந்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தல், அரசு அறிவிப்புகளையும் பொதுமக்களிடம் பகிர்ந்து கொள்ளவும்,வேலைவாய்ப்பு செய்திகளை பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வானொலியின் தொலை தொடர்பை 15 கடல் மைல் தொலைவு வரை
பயன்படுத்தலாம். இந்த வானொலி நிலையம் ஏப்ரல் மாதம் திறக்கப்படவுள்ளது என அவர்
தெரிவித்தார்.
பேட்டியின் போது அறக்கட்டளையின் செயலாளர் குணசேகரன், பொருளாளர் அப்துல்காதர் மற்றும் நம்புசேகரன் ராமநாதன், அருள்ரோச் ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment