Monday, March 14, 2016
ராமநாதபுரத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்தவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!!
ராமநாதபுரத்தில் வீடு புகுந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை,
மடிக்கணினி உள்ளிட்டவற்றை திருடிச் சென்றவர்களை போலீஸார்
தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஆதம்நாதசாமிநகர் பகுதியைச்
சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர், வெளிநாட்டில் வேலை
பார்த்து வருகிறார். இவரின் மனைவி மாலாதேவி (38). இவர்,வியாழக்கிழமை தனது உறவினரின் வீட்டுக்கு சென்றிருந்தார். பின்னர்
ஞாயிற்றுக்கிழமை அவர் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம்.
இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த 10 பவுன் தங்கச் சங்கிலி,மடிக்கணினி,
வெள்ளி குத்துவிளக்கு திருடுபோயிருந்தது தெரியவந்தது. இதன்
மதிப்பு ரூ.3லட்சம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் கேணிக்கரை போலீஸார் வழக்குப்
பதிந்து விசாரித்து வருகின்றனர்.
செய்தி: தினமணி
No comments :
Post a Comment