(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, March 1, 2016

அப்துல்கலாம் பெயரில் புதிய கட்சி!!

No comments :
ராமேசுவரத்தில் அப்துல்கலாம் பெயரில் புதிய கட்சியை அவரது ஆலோசகர் பொன்ராஜ் தொடங்கினார்.

ராமேசுவரம் அருகே உள்ள பேய்க்கரும்பு பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்துக்கு அவரது ஆலோசகர் பொன்ராஜ் நேற்று மாலை வந்தார். அங்கிருந்து அப்துல்கலாமின் அண்ணன் முகம்மது முத்துமீரா லெப்பை மரைக்காயரிடம் ஆசிபெற சென்றார். பின்னர் அப்துல்கலாமின் உறவினர்களை சந்தித்து பேசினார். 

அப்போது அவர்கள்அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டவர் அப்துல்கலாம் அவரது பெயரில் கட்சியும்கொடியும் அறிமுகப்படுத்த உள்ளதை அறிந்தோம். அவரது பெயருக்கு கலங்கம் வராமல் பார்த்துக்கொள்ளவும் என்று பொன்ராஜிடம் கேட்டுக்கொண்டனர். அதன்பின்னர் அப்துல்கலாம் நினைவிடத்துக்கு வந்த பொன்ராஜ் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 



பின்னர் அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் அப்துல்கலாம் விஷன் இந்தியா பார்ட்டிஎன்ற அரசியல் புதிய கட்சி பெயர் பலகையை பொன்ராஜ் திறந்து வைத்தார். 

தொடர்ந்து பச்சை, வெள்ளை, நீலம் ஆகிய நிறம் கொண்ட அப்துல்கலாம் உருவம் பொறித்த கொடியை அறிமுகம் செய்து கொடி ஏற்றிவைத்து பொன்ராஜ் பேசியதாவது:- 

ஊழலற்ற ஆட்சி அமையவேண்டும் என்ற அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றவும், ஊழலற்ற ஆட்சியை தமிழகத்தில் கொண்டுவர பாடுபடுவோம். இதற்காகவே இந்த புதிய கட்சி தொடங்கப்பட்டு உள்ளது. எங்கள் கட்சியின் மூலம் 100 சதவீதம் வெளிப்படையான நிர்வாகத்தையும், நேர்மையான, பொறுப்பான ஊழலற்ற ஆட்சியை நடத்துவோம்.

தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதையில் நிலைநிறுத்த இளைஞர்கள் ஒத்துழைப்பு கொடுக்க அழைக்கிறேன். கல்வி, வேளாண்மை, நதிநீர் இணைப்பு ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் மாநிலமாக உருவாக்குவோம். விரைவில் இணையதளம் மூலம் உறுப்பினர்களை சேர்த்து செயல்படுத்துவோம். 

சாதி வேறுபாடு இல்லை

இந்த கட்சிக்கு சாதி, மத, இன, வேறுபாடு எதுவும் இல்லை. அனைவரும் சமம். அனைவரும் இந்த கட்சியில் இணைய அழைக்கிறேன். இளைஞர்களே வாருங்கள். அனைவரும் கைகோர்த்து தமிழ்நாட்டை வளர்ச்சிஅடைந்த மாநிலமாக மாற்றுவோம். அடுத்தவாரம் சென்னையில் மீண்டும் கட்சியின் முழுவிவரம், செயல்பாடு குறித்து அறிவிப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment