(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, March 26, 2016

மனித நேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள்!!

No comments :
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.


சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இன்று மாலை சந்தித்து தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளார் ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருணாநிதி முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்குவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது.



இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இதனை தெரிவித்தார். அப்போது மேலும் அவர் கூறுகையில், திமுக உடனான தொகுதி உடன்பாட்டில் மமக 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றி அடுத்தடுத்த பேச்சுவார்த்தையில் தெரியவரும். எத்தனை அணிகள் போட்டியிட்டாலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். அதன் தலைவர் கருணாநிதி 6-வது முறையாக தமிழக முதலைமைச்சராக ஆவார் என ஜவாஹிருல்லா கூறினார்.


ஏற்கனவே திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment