(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, March 12, 2016

ராமநாதபுர தீவிபத்தில் 2 வீடுகள் சேதம்!!

No comments :
ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த தீவிபத்தில் 2 வீடுகள் சேதமடைந்தன.

ராமநாதபுரம் ஓம்சக்திநகர் ஒத்தப்பனை காளியம்மன் கோயில் பகுதியில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியருக்கு சொந்தமான 2 வீடுகள் உள்ளன.



இதில், சிக்கந்தர் பாத்திமா என்பவர் ஒரு வீட்டிலும், மற்றொரு வீட்டில் களஞ்சியம் என்பவரும் வாடகைக்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில் வியாழக்கிழமை இந்த வீடுகளில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் 2 வீடுகளிலும் இருந்த பொருள்கள்,முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன. இதுதொடர்பாக கேணிக்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment