Wednesday, February 17, 2016
துபாய் மாகாணத்திலுள்ள தனியார் பள்ளிகளின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி, பெற்றோர் அதிருப்தி!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மாகாணத்திலுள்ள தனியார் பள்ளிகளின் கட்டணத்தை உயர்த்திக் கொள்வதற்கு, துபாய் பள்ளிக் கல்வித்துறையின் அங்கமான 'அறிவு மற்றும் மனிதவள அலுவலகம்' (KHDA) அனுமதி அளித்துள்ளது.
2016-17 கல்வியாண்டு வரும் ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்குவதை அடுத்து, கல்விக் கட்டணத்தை 3.21% முதல் அதிகபட்சம் 6.42% வரை, பள்ளிகள் பெற்றுள்ள தர வரிசைக்கேற்ப உயர்த்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
இந்தக் கட்டண உயர்வு அறிவிப்பு நடுத்தர ஊதியம் பெறுவோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அமீரகத்தில் பெட்ரோல், கட்டுமானத்துறை, வாடகை உள்ளிட்டவற்றின் விலை குறைந்துள்ள நிலையில், இந்த உயர்வு சரியல்ல என்று பெற்றோர்கள் தங்கள் அதிருப்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
துபாயில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட இந்திய பள்ளிகளில் சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி: கல்ஃப் நியூஸ்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment