(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 17, 2016

கீழக்கரையில் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு!!

No comments :
கீழக்கரையில் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் செவ்வாய்கிழமை திருடிச் சென்றுள்ளனர்.

கீழக்கரை 500 பிளாட் பகுதியைச் சேர்ந்த செல்லச்சாமி மகன் முனியசாமி (35). இவர் கொத்தனார் வேலை செய்கிறார். இவரது மனைவி முருகவள்ளி சித்தாள் வேலை பார்க்கிறார். இவர்கள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு செவ்வாய்க்கிழமை வேலைக்கு சென்றுவிட்டனர்.


அப்போது யாரோ மர்ம நபர்கள் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 8 பவுன் தங்கநகை, 1 ஜோடி வெள்ளிக்கொலுசு, ரொக்கம் ரூ.9 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். திருடப்பட்ட பொருள்களின் மதிப்பு ரூ.2 லட்சம்.

கீழக்கரை காவல்நிலையத்தில் முனியசாமி புகார் செய்தார். அதன் பேரில் காவல் உதவி ஆய்வாளர் பொந்து முனியாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். தடயவியல் நிபுணர்கள் வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment