(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, February 13, 2016

பான் கார்டு எண் அவசியம்: ராமநாதபுரத்தில் நகை வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம்!!

No comments :
ரூ.2 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு எண் அவசியம் என்ற மத்திய அரசின் உத்தரவைக் கண்டித்து ராமநாதபுரத்தில் நகை வியாபாரிகள் வியாழக்கிழமை கடைகளை அடைத்தனர்.

ராமநாதபுரம் சிகில் ராஜ வீதியில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது. இது குறித்து தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலர் பார்த்தீபன் கூறியது:

சங்க உறுப்பினர்கள் 300 பேரும், உறுப்பினர்கள் அல்லாத கார்ப்பரேட் நிறுவனங்களும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டமாக கடையடைப்பு செய்துள்ளோம். ரூ.2 லட்சத்துக்கு மேல் நகை வாங்குவோர் அனைவரும் கட்டாயம் பான் கார்டு எண்ணை தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது கவலையளிக்கிறது. இந்தியாவில் 20 சதவிகிதம் பேர் மட்டுமே பான் கார்டு வைத்துள்ளனர். மீதம் உள்ள 80 சதவீதம் பேரிடம் பான்கார்டு இல்லை. பான்கார்டு இல்லாதவர்கள் மனு எழுதித் தர வேண்டும் என்று கூறுவதால் நகை விற்பனை வெகுவாக பாதித்து விடும். பொற்கொல்லர்களுக்கும் வருமானம் குறைந்து விடும். மத்திய அரசுக்கு வாட்வரி,விற்பனை வரி ஆகியன குறைந்து வரி வருவாய் இழப்பு ஏற்படும்.


7 பவுனுக்கு மேல் நகை வாங்கினாலே பான்கார்டு அவசியமாவதால் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள், விவசாயிகள் ஆகியோர் கூட நகை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவை உடனடியாக நீக்க வேண்டும் என்றார்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment