Saturday, February 13, 2016
ராமநாதபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 808 பேர் கைது!!
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் சாலை
மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 808 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலை
மறியல்
தமிழ்நாடு அரசு ஊழியர்
சங்கத்தின் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டமே
தொடரவேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் சதவீத
அடிப்படையில் அனைத்து படிகளும் வழங்க வேண்டும், 7–வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய
வேண்டும், காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு உடனடியாக பணி வழங்க
வேண்டும் என்பது போன்ற 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் கடந்த 10–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்துவருகிறது.
இந்த
போராட்டத்தின் தொடர்ச்சியாக நேற்று மாநிலம் முழுவதும் அரசு ஊழியர் சங்கத்தின்
சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதன்படி ராமநாதபுரம் மாவட்ட அரசு
ஊழியர் சங்கத்தின் சார்பில் யூனியன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு அரசு
ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்
கணேசமூர்த்தி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அங்கன்வாடி
ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாநில துணை தலைவர் முருகேஸ்வரி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முருகேசன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி
பேசினார்கள்.
ஆர்ப்பாட்ட முடிவில் அரசு
ஊழியர் சங்கத்தினர் அனைவரும் திரளாக சென்று தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.
இதனை தொடர்ந்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் மறியல்
செய்த 808 பேரை கைது செய்தார். கைது செய்யப்பட்ட அனைவரும்
ராமநாதபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுஉள்ளனர்.
செய்தி: தினத்தந்தி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment