(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, February 21, 2016

கீழக்கரையில் கூடுதல் வரதட்சணை கேட்டதாக 4 பேர் மீது வழக்கு!!

No comments :
கீழக்கரையில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.



கீழக்கரையைச் சேர்ந்த ஹாசிரா (25) என்பவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த அப்துல்ராசிக் என்பவருக்கும் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண்ணுக்கு 25 பவுன் நகை போடப்பட்டதாம். 

இந்நிலையில் கணவர் வீட்டார் கூடுதல் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக ஹாசிரா கொடுத்த புகாரின் பேரில் கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, அவரது கணவர் அப்துல்ராசிக், மாமனார், மாமியார் மற்றும் அப்துல்வஹாப் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி: தினமணி



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment