Saturday, February 6, 2016
ராமநாதபுரம் மார்க்கெட் தீ விபத்தில் 11 கடைகள் எரிந்து நாசம்!!
ராமநாதபுரம் பாரதிநகர் மார்க்கெட்டில் வியாழக்கிழமை இரவு
ஏற்பட்ட தீ விபத்தில் 11
கடைகள் எரிந்து நாசமாயின. இதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.
ராமநாதபுரம் பாரதிநகர் மார்க்கெட்
பகுதியில் மீன் கடைகள் மற்றும் காய்கறிக் கடைகள் என 20-க்கும் மேற்பட்ட கூரை வேய்ந்த கடைகள் உள்ளன.
இக்கடைகளில்
வியாழக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்ததும், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இதில் செந்தில், தினேஷ், அசார்,
சரோஜா, ரெகுநாதன் உள்ளிட்ட 11 பேரின் கடைகளில் இருந்த பொருள்கள்
எரிந்து நாசமாயின. இதுகுறித்து, கேணிக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து
விசாரித்து வருகின்றனர்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment