Sunday, February 28, 2016
ராமநாதபுரத்தில் நேற்று காலை பலத்த மழை!!
ராமநாதபுரத்தில் நேற்று காலை திடீரென்று பலத்த மழை பெய்து மக்களை குளிர்வித்தது. ராமநாதபுரம் நகரில் கடந்த சில நாட்களாக வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இத்துடன் கடந்த சிலநாட்களாக அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் மக்கள் பரிதவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை திடீரென்று பலத்த மழை பெய்தது.
ராமேஸ்வரம்,
தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம்,
வேதாளை, குயவன்குடிஉள்ளிட்ட
பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
ராமநாதபுரம் நகரில் அரை மணி நேரம் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
ராமநாதபுரம் நகரில் அரை மணி நேரம் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
திடீர் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி தென்பட்டது.
இதனால் மக்கள் மகிழ்ந்தனர்.
செய்தி: திரு.
தாஹிர்,
கீழை.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரத்தில் சர்வதேசத்தர ஆக்கி மைதானத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்!!
ராமநாதபுரத்தில் சர்வதேசத்தர ஆக்கி மைதானத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் தன்னிறைவு திட்டத்தின்கீழ் ரூ.3 கோடியே 85 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும், உட்கட்டமைப்பு இடை நிரப்பு நிதியில் இருந்து ரூ.1 கோடியே 57 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலும், திட்ட சேமிப்பு மற்றும் ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.51 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பிலும் சர்வதேச தரத்திலான செயற்கை புல்வெளி ஆக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்திற்கு தன்னிறைவு திட்டத்தில் வேலுமாணிக்கம் நிறுவனங்களின் சார்பில் ரூ.50 லட்சமும், செய்யதம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.35 லட்சமும், மாவட்ட ஆக்கி சங்கத்தின் சார்பில் ரூ.28 லட்சத்து 50 ஆயிரமும், டாக்டர் கனகமணி அரவிந்தராஜ் ரூ.10 லட்சமும், சென்னை கால்பந்து கழகம் ரூ.5 லட்சமும் பங்களிப்பாக வழங்கி உள்ளனர்.
இந்த ஆக்கி விளையாட்டு மைதானத்தை நேற்று காலை முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையொட்டி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் முனைவர் நடராஜன் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அலிஅக்பர், அன்வர்ராஜா எம்.பி, மாவட்ட ஊராட்சி தலைவர் சுந்தரபாண்டியன், ராம்கோ தலைவர் முருகேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி, நகர் செயலாளர் அங்குச்சாமி, நகரசபை தலைவர் சந்தானலெட்சுமி, வேலுமாணிக்கம் நிறுவனங்களின் தலைவர் மனோகரன், ஆக்கி சங்க மாநில செயலாளர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மருதுபாண்டியன், அ.தி.மு.க. தொகுதி இணை செயலாளர் தஞ்சி சுரேஷ்குமார், மாவட்ட திட்ட இயக்குனர் பழனி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சுற்றுலா மாளிகை
முன்னதாக, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.11 கோடி மதிப்பில் சுமார் 7 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அலுவலக கட்டிடத்தையும், ராமேசுவரத்தில் ரூ.2 கோடியே 23 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு சுற்றுலா மாளிகையையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் குருதிவேல்மாறன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்தி: தினத்தந்தி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜூனா விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!!
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா
விருது மற்றும் அர்ஜூனா விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள், வீராங்கனைகள்,
பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டில் தொடர்புடையவர்களுக்கு
ஆண்டுதோறும் பல்வேறு விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.
அதன்படி, 2015-16ஆம் ஆண்டுக்கான
ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜூனா விருதுக்கான விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு
விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப உறை மீது சம்பந்தப்பட்ட
விருதை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, உறுப்பினர்,
செயலர்,
தமிழ்நாடு விளையாட்டு
மேம்பாட்டு ஆணையம்,
116-ஏ,
ஈவேரா பெரியார் நெடுஞ்சாலை,
நேரு பூங்கா,
சென்னை-600084
என்ற முகவரிக்கு வரும் 10.4.2016-க்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்கவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு
மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், தமிழ்நாடு விளையாட்டு
மேம்பாட்டு ஆணையம்,
எஸ்.டி.ஏ.டி. சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கம், ராமநாதபுரம்,
தொலைபேசி-0456-7230238, செல்லிடப்பேசி 74017-03452 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
Thursday, February 25, 2016
கீழக்கரையில் கலைகட்டிய முதல்வர் ஜெ.பிறந்தநாள் விழா (படங்கள்)!!
அதிமுக பொதுச்செயலாளர் செல்வி.ஜெயலலிதா அவர்களின் 69வது பிறந்தநாள் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
கீழக்க்ரையில் நடைபெற்ற விழாவில் அதிமுக தொண்டர்களால் “கேக் “ வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
கீழக்க்ரையில் நடைபெற்ற விழாவில் அதிமுக தொண்டர்களால் “கேக் “ வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இது குறித்து அதிமுக பிரமுகரும், இளைஞர் அணி செயலாளருமான
திரு. சுல்தான் அவர்கள் நம் முகவை முரசு க்கு அளித்த அளித்த செய்தியில்:
அம்மா அவர்களில் பிறந்தநாளை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கொண்டாடி வருகிறோம்,
அம்மா அவர்களில் பிறந்தநாளை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கொண்டாடி வருகிறோம்,
240 ஆண்களுக்கு வேட்டியும்
220 பெண்களுக்கு சேலையும், 3 கிலோ அரிசியும்,
2000 மக்களுக்கு சாப்பாடும்,
4000 மக்களுக்கு இனிப்பும்
வழங்கப்பட்டது. மக்கள் அனைவரும் அகமகிழ்ந்து அம்மா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர், என்றார்.
செய்தி மற்றும் படங்கள்: திரு. சுல்தான்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
Wednesday, February 24, 2016
கீழக்கரை நகராட்சியில் கழிப்பறை கட்டுமானம் சம்பந்தமாக சமாதானக் கூட்டம்!!
கீழக்கரை நகராட்சியில் சமாதானக் கூட்டம் செவ்வாய்க்கிழமை
நடைபெற்றது.
கூட்டத்துக்கு,
வட்டாட்சியர் கமல்பாய் தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவி
ராவியத்துல் கதரியா,
துணைத் தலைவர் ஹாஜா முகைதீன், ஆணையர் மருது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கீழக்கரையில் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கீழக்கரை
நகராட்சிக்கு சொந்தமான மயானக்கரை மற்றும் பெத்ரி தெரு குப்பை கிடங்கு ஆகிய இரு
இடங்களிலும் பொது கழிவறைகள் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு ஆயத்த பணிகள்
நடைபெற்றன. இதற்கு அப்பகுதி பொதுமக்கள், கவுன்சிலர்கள் மற்றும்
சமுதாய தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து, கீழக்கரை நகராட்சியில் செவ்வாய்க்கிழமை சமுதாய தலைவர்கள் பங்கேற்ற சமாதானக்
கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பல இடங்களில் ஏற்கெனவே கட்டப்பட்ட கழிவறைகள் பராமரிப்பின்றி மூடப்பட்டு கிடப்பதால் அந்த கழிவறைகளை பயன்பாட்டுக்கு கொண்டு
வரும் படியும்,
தற்போது தேர்வு செய்த இடங்களில் சிறுவர் பூங்கா மற்றும்
விளையாட்டு மைதானங்கள் கட்ட முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் கருத்துக்கள்
தெரிவிக்கப்பட்டன.
இது குறித்து நகராட்சி ஆணையர் மருது கூறியதாவது:
இக்கூட்டத்தில் கூறிய கருத்துக்கள் அனைத்தும் மாவட்ட
ஆட்சியருக்கு தகவல் அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று
கூறினார்.
செய்தி:
தினமணி
பட உதவி: திரு தாஹிர், கீழக்கரை
பட உதவி: திரு தாஹிர், கீழக்கரை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
UPSC தேர்வு முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளன!!
மத்திய பொதுத் தேர்வாணையத்தின் தேர்வு (யுபிஎஸ்சி தேர்வு)
முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளன. குடிமைப் பணிகள் தேர்வுகள் கடந்த
டிசம்பர் 18-ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெற்றன.
இந்தத் தேர்வுகளின் முடிவுகள்தான் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தேர்வு முடிவுகளை அறிய http://upsc.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்லவேண்டும்.
அங்கு 'Written Result - Civil Services (Main) Examination. 2015 என்ற இடத்தில் கிளிக் செய்தால் முடிவுகள் தோன்றும். அந்த முடிவுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
அங்கு 'Written Result - Civil Services (Main) Examination. 2015 என்ற இடத்தில் கிளிக் செய்தால் முடிவுகள் தோன்றும். அந்த முடிவுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
தேர்வில் தகுதி பெறாத மாணவர்கன் மதிப்பெண் விவரம்
இணையதளத்தில் 15
நாள்களுக்கு இருக்கும். இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட
பிறகு 3 மாதம் வரை அந்த முடிவுகள் இருக்கும்.
இதைத் தொடர்ந்து தனி நபர் திறன் தேர்வு மார்ச் 8-ம் தேதி நடைபெறவுள்ளது. இது
Dholpur
House,
Shahjahan
Road,
New
Delhi - 110069
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
அதிமுக மாவட்ட மாணவரணி சார்பில் ரத்த தான முகாம்!!
ராமநாதபுரத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் அதிமுக மாவட்ட
மாணவரணி சார்பில் தன்னார்வ ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட மாணவரணியின் செயலர் செந்தில்குமார் தலைமை
வகித்தார். அதிமுக மாவட்டச் செயலர் ஆர்.தர்மர்,மகளிர் அணியின் மாவட்டச் செயலர்
கவிதா சசிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவரணி மாவட்ட துணைச் செயலர் சுரேஷ் வரவேற்றார்.
இதில், மாணவரணியைச் சேர்ந்த
தொண்டர்கள் 68
பேர் ரத்த தானம் செய்தனர்.
அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் சேக் அப்துல்லா
தலைமையில் ஆய்வக நுட்பநர் சபீஅகமது உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் ரத்த சேகரிப்பு
பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக இம்முகாமை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ்
தொடங்கிவைத்தார்.
அண்ணா தொழிற்சங்க இணைச்செயலர் ஏ.பி.சந்திரன், மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் ரவீந்திரன்,தமிழ்வாணன் உள்பட பலர்
கலந்துகொண்டனர்
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
Monday, February 22, 2016
இராமநாதபுரத்தில் 3லட்சங்கள் செலவில் மாற்றுத் திறனாளிகள் உபராணங்கள் வழங்கப்பட்டது!!
இராமநாதபுரம் தொகுதி மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில்
தொகுதி மேம்பாட்டு நிதி 3லட்சங்கள் செலவில் மாற்றுத் திறனாளிகள் உபராணங்கள் வழங்கப்பட்டது.
பொருட்கள் வழங்கியவர்;
இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்,மமக மாநில தலைவர் பேராசிரியர்;M.H.ஜவாஹிருல்லாஹ், MBA.MPHIL.PHD.MLA.,
இதில் மமக மாநில தலைமை நிலையச் செயலாளர் ஹசைன் கனி,தமுமுக தென்கிழக்கு தேர்தல் அதிகாரி வாணி சித்திக்,மமக மாவட்ட செயலாளர் அன்வர் அலி,தமுமுக மாவட்ட து.செயலாளர்
பாக்கர் அலி,சட்டமன்ற உறுப்பினர்(உதவியாளர்)தாஹிர் சைபுதீன்,ஆற்றாங்கரை அஃபான்,இராமநாதபுரம் நபீஸ் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அலுவலர்,அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.
செய்தி: திரு. அஃபான், இராமநாதபுரம்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
மிருதன் - தமிழ் திரை விமர்சனம்!!
ஊட்டியில் தனது தங்கை அனிகா வுடன் வசிக்கிறார் போக்கு
வரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெயம் ரவி. டாக்டர் லட்சுமி மேனனை ஒருதலையாகக்
காதலிக்கிறார். ஊரில் வைரஸ் நோய்த் தொற்றுக்கு ஆளாகிறது ஒரு நாய். அது ஒருவரைக்
கடிக்க, வெறிநாயைவிட மோசமாக மாறும் அவர் தன் குடும்பத்தினரைக் கடித்துக் குதறுகிறார்.
அவர்களும் நோய்த் தொற்றுக்கு ஆளாகி, எதிர்ப்படும் அனைவரையும்
கடிக்கின்றனர். கடிபட்ட அனைவரும் மனித மிருகங்களாக மாறுகிறார்கள். மனித மிருகங்கள்
வேகமாகப் பெருக,
ஊரே பீதியின் பிடியில் சிக்குகிறது.
லட்சுமி மேனனும் அவருடன் பணி யாற்றும் மருத்துவக் குழுவும்
தடுப்பு மருந்தை உருவாக்க கோவைக்குச் செல்லவேண்டி இருக்கிறது. இவர் களைக் கோவைக்கு
அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்கிறார் ஜெயம் ரவி. திரும்பிய பக்கமெல்லாம் மிருக
மனிதர்களின் தாக்குதல். ஜெயம் ரவி அவர்களை ஜெயித்தாரா?
தமிழின் முதல் ‘ஸாம்பி’ வகைப் படம் என்று சொல்லப்பட்ட படம் இது. ஆனால் ஸாம்பிக்கும் இதற்கும் துளியும்
சம்பந்தம் இல்லை. ஸாம்பி என்றால் பிணம்போல உணர்ச்சியற்று நடமாடும் மனிதன் அல்லது
மனிதனைப் போல நடமாடும் பிணம். இந்தப் படம் வைரஸ் தாக்குதலால் வெறிகொண்ட மிருகமாக
மாறும் மனிதர்களைப் பற்றியது. அதையாவது ஒழுங்காகக் கையாண்டிருக்கிறார்களா என்று
பார்த்தால் அதிலும் ஏமாற்றம்தான்.
மருந்து இல்லாத இந்த பயங்கரமான நோய்க்கு ஆளானவர்களைக்
கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கும் காவல் துறை ஆணையர் அதன் பிறகு தன் காவல்
படையினரைக் கூட்டிக்கொண்டு எங்கு போனார் என்று தெரியவில்லை. இத்தனை பெரிய
அபாயத்தைக் கையாள அரசு என்ன செய்கிறது என்பதும் தெரியவில்லை. இருப்பதெல்லாம்
ஆயிரக்கணக்கில் பெருகும் மிருக மனிதர்கள். அவர்களை எதிர்கொள்ள தனி ஒருவனாக ஜெயம்
ரவி.
மிருக மனிதர்களுக்கு தண்ணீர் என்றால் ஒவ்வாமை என்பதை ஆரம்
பத்திலேயே காட்டிவிடுகிறார்கள். தண் ணீரைக் கொண்டு அவர்களை முடக்கும் திட்டம்
அரசுக்குத் தோன்றாதா என்ன?
மிருக மனிதர்களை எதிர்கொள்வதிலும் த்ரில் எதுவும் இல்லை.
அனைவரும் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு
பாய்கிறார்கள். ஜெயம் ரவி ஓயாமல் அவர்களை சுட்டுக்கொண்டும் அடித்துக் கொண்டும்
இருக்கிறார்.
அரசியல்வாதியை சித்தரித்துள்ள விதம் அரதப் பழசு.
தொடக்கத்தில் லட்சுமி மேனனிடம் ஜெயம் ரவி நடந்து கொள்ளும் விதத்துக்கு எந்தக்
காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. ‘முன்னாள் காதலி’ என்னும் பாட்டு தேவையில்லாமல் வந்து எரிச்சலூட்டுகிறது. பதின் வயதில் உள்ள
தங்கை, அண்ணனுக்குப் பெண் பார்ப்பதற்காக திருமணத் தரகரைக் கூட்டிவரும் அபத்தமும்
படத்தில் உண்டு.
தலைமை மருத்துவர் தொடர்பான சஸ்பென்ஸ், மரண பீதிக்கு நடுவே இழையோடும் காதல் கதை, அண்ணன் தங்கை பாசம்
ஆகியவைதான் சிறிது ஆறுதலைத் தருகின்றன.
மிருக மனிதர்களின் ஒப்பனைகள், கிராஃபிக்ஸ் ஆகியவற்றின் தரம் மிகவும் சுமார். டி.இமானின் இசையில் பாடல்கள்
கேட்கும்படி இருந்தாலும் பின்னணி இ(ம்)சையைத் தாங்க முடியவில்லை. எஸ்.வெங்கடேஷின்
ஒளிப்பதிவு,
படத் தைக் கொஞ்சம் தூக்கி நிறுத்துகிறது.
ஜெயம் ரவி நன்றாகவே நடித் திருக்கிறார். குறிப்பாக கடைசிக்
காட்சி களில் நன்கு உணர்ச்சிகளைக் கொட்டி நடித்திருக்கிறார். சவால் இல்லாத
வேடத்தில் லட்சுமி மேனன் கவனிக்க வைக்கிறார். குழந்தை அனிகாவின் நடிப்பு மனதில்
நிற்கிறது.
விமர்சனம்: தி ஹிந்து
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
கீழக்கரையில் 19ம் தேதி நடக்கவிருந்த நகராட்ச துப்பரவு மேற்பார்வையாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு ரத்து !!
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி டிராக்டர் (குப்பை வண்டி) ஓட்டுநராக பணிபுரிந்த அய்யப்பன் உடல்நிலை பாதிக்கப்பட்டார். அவரது இடது கால் அகற்றப்பட்டு செயற்கைக்கால் பொருத்தப்பட்டது. ‘மாற்றுத்திறனாளியான தன்னால் டிரைவர் பணியைச் செய்ய முடியாது என்பதால் மாற்றுப்பணி வழங்க வேண்டும்’ என நகராட்சித் தலைவர், ஆணையரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், ரூ.2 லட்சம் லஞ்சம் கொடுத்தால் மாற்றுப்பணி வழங்குவதாக கூறுவதாக புகார் எழுந்ததது.
இதுகுறித்து அய்யப்பன் ராமநாதபுரம் கலெக்டரிடம் புகார் அளித்ததோடு தனக்கு மாற்றுப்பணியாக காலியாக உள்ள துப்புரவு மேற்பார்வையாளர் பணி வழங்க வேண்டும் என்றும் வழங்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்..
இதன் செய்தி எதிரொலியாக கடந்த 19ம் தேதி நடைபெற இருந்த துப்புரவு மேற்பார்வையாளர் பணிக்கான நேர்முக தேர்வு மறுதேதி குறிப்பிடப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி தகவல் பலகையில் சுற்றறிக்கை ஒட்டப்பட்டுள்ளது.
செய்தி: தினகரன்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
Sunday, February 21, 2016
கீழக்கரையில் கூடுதல் வரதட்சணை கேட்டதாக 4 பேர் மீது வழக்கு!!
கீழக்கரையில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை
கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீஸார்
சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கீழக்கரையைச் சேர்ந்த ஹாசிரா (25) என்பவருக்கும்,
அதே ஊரைச் சேர்ந்த அப்துல்ராசிக் என்பவருக்கும் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண்ணுக்கு 25 பவுன் நகை போடப்பட்டதாம்.
இந்நிலையில் கணவர் வீட்டார் கூடுதல் வரதட்சணை கேட்டு
தன்னை கொடுமைப்படுத்துவதாக ஹாசிரா கொடுத்த புகாரின் பேரில் கீழக்கரை அனைத்து
மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, அவரது கணவர்
அப்துல்ராசிக்,
மாமனார், மாமியார் மற்றும்
அப்துல்வஹாப் ஆகிய 4
பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
Saturday, February 20, 2016
சேதுபதி - தமிழ் திரை விமர்சனம்!!
நடிகர்கள்: விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், வேல ராமமூர்த்தி ஒளிப்பதிவு: பி தினேஷ் கிருஷ்ணன்
இசை: நிவாஸ் பிரசன்னா
தயாரிப்பு: ஷான் சுதர்சன்
இயக்கம்: அருண் குமார்
பக்கத்து வீட்டு இளைஞன் போல பாந்தமாக வந்து போய்க் கொண்டிருந்த விஜய் சேதுபதி, மெல்ல ரவுடியாக மாற முயற்சித்து, இப்போது அதிரடி போலீசாக அவதாரமெடுத்துள்ளார் சேதுபதியில். மதுரையில் ஏசி புரமோஷனுக்குக் காத்திருக்கும் இன்ஸ்பெக்டர் விஜய் சேதுபதி இயல்பிலேயே நல்லவர், நேர்மையானவர். அழகான குடும்பம், அமைதியான வாழ்க்கை என்ற அவரது நேர்க்கோட்டில் க்ராஸ் ஆகிறார் மதுரை தாதா வேல ராமமூர்த்தி. அடுத்து உதவி கமிஷனராக பதவி உயர்வு பெறவிருக்கும் சேதுபதிக்கு, ஒருகட்டத்தில் இருக்கிற இன்ஸ் வேலையும் பறிபோகும் சூழல். இந்த நெருக்கடியிலிருந்து எப்படி மீள்கிறார் விஜய் சேதுபதி என்பது க்ளைமாக்ஸ். சரி, எதிர்ப்பார்த்த வழக்கமான போலீஸ் கதைதானே.. இதில் என்ன வித்தியாசம் என்கிறீர்களா? இருக்கிறது.... அது, விஜய் சேதுபதி.. விஜய் சேதுபதி மட்டும்தான்!
முறுக்கு மீசை, நிமிர்ந்த தோள்கள், அலட்சிய தோற்றம் என வழக்கமான சினிமா போலீஸ் வேடம் என்றாலும், அதை இயல்பாக செய்த விதத்தில் கடைசி காட்சி வரை வசீகரிக்கிறார் வுிஜய் சேதுபதி. மனைவியிடம் காதலில் குழைந்து காலில் விழுவதும், குழந்தைகள் ஆசைக்காக அறை முழுக்க தண்ணீரைக் கொட்டி ஆட்டம் போடுவதுமாக ஜொலிக்கிறார். சகல பலம் பொருந்திய வேல ராமமூர்த்தியை கோவில் திருவிழாவில் வைத்து கைது செய்து அழைத்துச் செல்லும் காட்சி ரசிக்க வைக்கிறது. போலீஸ்காரன் மனைவியாக வரும் ரம்யா நம்பீசனுக்கு பெரிதாக வேலையில்லைதான். ஆனால் செல்ல கோபம், சிணுங்கல், கணவனைக் காலில் விழவைக்கும் ரொமான்ஸ் என அழகான ராட்சசியாக அசத்தியிருக்கிறார். வேல ராமமூர்த்திக்கு இதில் பிரதான வில்லன் வேடம். அந்த உருவத்துக்கு அத்தனை கச்சிதமாகப் பொருந்துகிறது. ஆனால் பொசுக்கென்று அமைந்துவிட்டது அவருக்கான க்ளைமாக்ஸ்.
எப்போதும் விஜய் சேதுபதியின் நிழலாக வரும் அந்த சுறுசுறு சப் இன்ஸ்பெக்டர், மந்த ஏட்டு, கமிஷனராக வரும் நபர், அந்த விசாரணைக் கமிஷன் அதிகாரி என அனைவரும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். ஆனால் படத்தில் எந்தக் காட்சியும் புதிதாக இல்லை என்பதுதான் மிகப் பெரிய குறை. மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியன் தொடங்கி நாம் பார்த்த பல படங்களில் பார்த்த காட்சிகளே. ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி என்றால் அவருக்கு ஒரு டெரர் வில்லன், அவரால் வரும் பிரச்சினைகள் என்ற வழக்கமான ஃபார்முலா கதைதானே இந்த சேதுபதியும். காட்சிகளையாவது புதிதாக யோசித்திருக்கலாமே. அதுவும் வேல ராமமூர்த்தியைக் கைது செய்த பிறகு, ஒரு பத்து நிமிடங்கள் விஜய் சேதுபதியும் அவர் மகனும் மனைவியும் வரும் காட்சிகள் மகா வெட்டி. தினேஷின் ஒளிப்பதிவில் குறையில்லை. நிவாஸ் பிரசன்னா இசையில் முதல் பாடல் ஓகே. பின்னணி இசை சில காட்சிகளில் காதுகளைப் பதம் பார்க்கிறது.
விமர்சனம்: ஒண் இண்டியா
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரத்தில் பிப். 23 ஆம் தேதி மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்!!
ராமநாதபுரம் மின்பகிர்மான கோட்ட
அலுவலகத்தில் பிப். 23 ஆம் தேதி காலை 11
மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் கோட்ட
அலுவலகத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மின்வாரிய
செயற்பொறியாளர் எம்.ஜோசப் செல்வராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் முதற்கட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி!!
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் முதற்கட்ட வாக்குப்பதிவு
எந்திரங்களை சரிபார்க்கும் பணியை கலெக்டர் நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு
செய்தார்.
வாக்குப்பதிவு எந்திரம்
ராமநாதபுரம் தமிழ்நாடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலுள்ள
சேமிப்பு கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும்
முதல்கட்ட பணியை மாவட்ட கலெக்டர் நடராஜன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:–
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளான பரமக்குடியில் 301 வாக்குச்சாவடி
மையங்களும்,
திருவாடானையில் 321, ராமநாதபுரத்தில் 321, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 364 வாக்குச்சாவடி
மையங்கள் என மொத்தம் 1,307
வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்காக1,674 வாக்குப்பதிவு
எந்திரங்கள் மற்றும் 2,500
கட்டுப்பாட்டு கருவிகள் பீகார் மாநிலத்தில் இருந்து
கொண்டுவரப்பட்டு,
ராமநாதபுரத்திலுள்ள தமிழ்நாடு ஒழுங்குமுறை விற்பனை கூட
சேமிப்பு கிட்டங்கியில் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுஉள்ளது. ராமநாதபுரம், முதுகுளத்தூர்,
பரமக்குடி மற்றும் திருவாடானை ஆகிய தொகுதிகளில் உள்ள
வாக்குச்சாவடி மையங்களுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு
கருவிகள் பெல் நிறுவன பொறியாளர்கள் மேற்பார்வையில் சரிபார்க்கும் பணி
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதல் கட்ட பரிசோதனை
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு
எந்திரங்களை வருகிற 24–ந்தேதி வரை முதல்கட்ட பரிசோதனை செய்யவும், அப்போது
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதி ஒருவரை அனுமதிக்கவும்
அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த பணியை விரைந்து முடித்து சம்பந்தப்பட்ட தேர்தல்
அலுவலர்களிடம் வழங்க அலுவலர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள்
வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது ராமநாதபுரம்
வருவாய் கோட்டாட்சியர் ராம்பிரதீபன், தேர்தல் தாசில்தார்
சுகுமாறன் மற்றும் தேர்தல் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தி: தினத்தந்தி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
Wednesday, February 17, 2016
துபாய் மாகாணத்திலுள்ள தனியார் பள்ளிகளின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி, பெற்றோர் அதிருப்தி!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மாகாணத்திலுள்ள தனியார் பள்ளிகளின் கட்டணத்தை உயர்த்திக் கொள்வதற்கு, துபாய் பள்ளிக் கல்வித்துறையின் அங்கமான 'அறிவு மற்றும் மனிதவள அலுவலகம்' (KHDA) அனுமதி அளித்துள்ளது.
2016-17 கல்வியாண்டு வரும் ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்குவதை அடுத்து, கல்விக் கட்டணத்தை 3.21% முதல் அதிகபட்சம் 6.42% வரை, பள்ளிகள் பெற்றுள்ள தர வரிசைக்கேற்ப உயர்த்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
இந்தக் கட்டண உயர்வு அறிவிப்பு நடுத்தர ஊதியம் பெறுவோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அமீரகத்தில் பெட்ரோல், கட்டுமானத்துறை, வாடகை உள்ளிட்டவற்றின் விலை குறைந்துள்ள நிலையில், இந்த உயர்வு சரியல்ல என்று பெற்றோர்கள் தங்கள் அதிருப்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
துபாயில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட இந்திய பள்ளிகளில் சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி: கல்ஃப் நியூஸ்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
பரமக்குடி அருகே அரசு பஸ் - டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து, 2 பெண்கள் உயிரிழப்பு, 19 பேர் காயம்!!
பரமக்குடி அருகே அரசு பஸ் - டிப்பர் லாரி நேருக்கு நேர்
மோதியதில் 2
பெண்கள் சம்பவ இடத்தில் பலியாகினர். குழந்தை உட்பட 19 பேர் பலத்த காயமடைந்தனர்.
மதுரையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி நேற்று மாலை 5 மணிக்கு "ஒன் டூ ஒன்' அரசு பஸ் வந்து
கொண்டிருந்தது. பரமக்குடியில் இருந்து மதுரை நோக்கி செம்மண் ஏற்றிய டிப்பர் லாரி
சென்றது. மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்த்திபனூர் அருகே
மரிச்சுக்கட்டியில் சென்ற போது பஸ்சும், லாரியும் நேருக்கு நேர்
மோதி விபத்துக்குள்ளானது. இதில் விக்கிரமபாண்டிய புரத்தைச் சேர்ந்த சண்முகவேலு
மனைவி மருதாயி,
60, வாலி நோக்கம் அருகே கீழக்கடாரத்தைச் சேர்ந்த ஆண்டி மனைவி
லட்சுமி,
30, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
பஸ் டிரைவர் நடராஜன், 45, கண்டக்டர்
அனந்தநாராயணன்,
56, திருமூர்த்தி மகள் அனிதா, 3, மதுரை கோமதி,
68, ராமநாதபுரம் இந்திரா, 33, கீழக்கடாரம்
மாரியம்மாள்,
56, பிச்சை, 40, முருகன், 47, குண சேகரன்,
23, லாரி டிரைவர் உடை குளம் ராஜூ ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
அனைவரும் உடனடியாக மீட்கபட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்க பட்டனர்.
ராமநாதபுரம் துணை தாசில்தார்(தேர்தல்) சுரேஷ்குமார், 44 உட்பட 5
பேர் லேசான காயங்களுடன் தப்பினர். சம்பவ இடத்திற்கு 108 மற்றும் அனைத்து தனியார் ஆம்புலன்ஸ்களும் விரைந்து சென்று காயமடைந்த வர்களை
மீட்டு மருத்துவ மனைகளில் சேர்த்தனர். கலெக்டர் நடராஜன், சப்-கலெக்டர் சமீரன் பரமக்குடி அரசு மருத்துவ மனையில் காயமடைந்தவர்களுக்கு
ஆறுதல் கூறினர்.
பரமக்குடி தாசில்தார் செய்யதுமுகம்மது, டி.எஸ்.பி. பொன்னரசு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். இந்த விபத்தால் மதுரை -
ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து முடங்கியது.
காயமடைந்த மாரியம்மாள் கூறியதாவது: கீழக்கிடாரத்தைச்
சேர்ந்த நாங்கள் 6
பேர் அரசு பஸ்சில் ராமநாதபுரத்துக்கு சென்று
கொண்டிருந்தோம். எதிரே வந்த லாரி மற்றொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட போது பஸ்
மீது மோதியது. பின்னர் அனைவரின் அலறல் சப்தம் மட்டும் கேட்டது. என்னுடன் வந்த
உறவினர் லட்சுமி பலியானார்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)