(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, January 24, 2016

ISRO வேலை வாய்ப்புகள்!!

No comments :
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில்(இஸ்ரோ) வேலை பார்ப்பதற்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இஸ்ரோவில் ஜூனியர் பர்சனல் அசிஸ்டண்ட், ஸ்டெனோகிராபர், அசிஸ்டண்ட் பணியிடங்கள் காலியாகவுள்ளன. மொத்தம் 185 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவுப்பு செய்யப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் இஸ்ரோ பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். தகுந்த ஆவணங்களுடன் விம்ணப்பங்களை அஞ்சல் மூலம் இஸ்ரோவுக்கு அனுப்பவேண்டும்.



இஸ்ரோவானது, பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு வருகிறது. மத்திய அறிவியல் துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இஸ்ரோ உள்ளது. அறிவியல் ஆராய்ச்சி, கிரக ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. 1962-ல் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முயற்சியால் அமைக்கப்பட்டது இஸ்ரோ.

கூடுதல் விவரங்களுக்கு இஸ்ரோவின் இணையதளமான www.isro.gov.in -ல் தொடர்புகொள்ளலாம்.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment