(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, January 19, 2016

பொதுமக்களின் குறைகளைத் தீர்க்க இன்று உதயமாகிறது ‘‘அம்மா அழைப்பு மையம்'!!

No comments :
தமிழகத்தில் பொதுமக்களின் குறைகளை தொலைபேசி மூலம் நேரடியாக பதிவு செய்யும் வகையிலான டெலிபோனிக் கேர் மையத்தினை முதல்வர் ஜெயலலிதா இன்று துவங்கி வைக்கின்றார். பொதுமக்களின் குறைகளைத் தீர்க்க ‘‘அம்மா அழைப்பு மையம்'' என்ற திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வந்துள்ளது.



இந்த மையத்திற்கு 1100 என்ற இலவச எண் தரப்பட்டுள்ளது. இந்த நம்பரை எளிதாக மனதில் வைத்துக் கொள்ளலாம். எந்த இடத்தில் இருந்தும் இந்த நம்பரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். அந்தக் குறை சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். அதற்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டு குறையை பதிவு செய்தவருக்கு பதிலளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புதிய திட்டத்தை இன்று பிற்பகல் 12.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment