(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, January 30, 2016

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெடி பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவர் கைது!!

No comments :
 ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே வெடி பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

 புதுக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் கார்மேகம் (40). இவர், வெடிபொருள்களை பதுக்கி வைத்திருப்பதாக தொண்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வியாழக்கிழமை போலீஸார் கார்மேகம் வீட்டுக்குச் சென்று சோதனையிட்டனர்.




 அங்கு அனுமதியின்றி 25 ஜெலட்டின் குச்சிகள், 49 டெட்டனேட்டர்கள் ஆகிய வெடி பொருள்களை கார்மேகம் பதுக்கி வைத்திருந்ததைக் கண்டறிந்தனர். இதையடுத்து, வெடிபொருள்களை பறிமுதல் செய்த போலீஸார், கார்மேகத்தை கைது செய்தனர். மேலும் வெடிபொருள் வைத்திருந்தது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment