(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, January 24, 2016

ரயில் ஏறும் போது தவறி விழுந்து முதியவர் இறப்பு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ளது !!

No comments :
ராமேஸ்வரம்- மதுரை பயணிகள் ரயில் நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் ரயில் நிலையத்திற்கு வந்தது.  அப்போது முதியவர் ஒருவர் ரயிலில் ஏற முயன்றபோது நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார். அவர் மீது ரயில் ஏறிச் சென்றது.  சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். 




ராமேஸ்வரம் ரயில்வே போலீசார் ரயில் நிலையம் சென்று முதியவர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.  இறந்தவர் குறித்து தகவல் தெரியவில்லை.  மஞ்சள் கலரில் அரைக்கை சட்டையும், வெள்ளை நிற வேட்டியும் அணிந்து இருந்தார். 

இவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment