(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, January 21, 2016

திரளான பக்தர்கள் கலந்து கொண்ட ராமேசுவரம் மகா கும்பாபிஷேகம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ராமநாதசுவாமி கோயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். இதற்காக மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது. விழாவில் முக்கியப் பிரமுகர் கலந்து கொண்டனர். 


மேலும்,தமிழக சட்ட உதவி மைய உறுப்பினர் செயலர் டீக்காராமன், ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) எம்.பி.ராம், தலைமைக் குற்றவியல் நீதிபதி சந்திரன், கூடுதல் மாவட்ட நீதிபதி சிவ கடாட்சம், ராமேசுவரம் நீதிபதி கே.பி. இளவரசி,  தோட்டக்கலைத் துறை செயலர் ராஜேந்திரன், போக்குவரத்துத் துறை இணை ஆணையர் (செயலாக்கப்பிரிவு) வி.பாலன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரோசாலி சுமைதா, செய்தித் துறையின் முன்னாள் இயக்குநர் கற்பூர சுந்தரபாண்டியன், பீகார் மாநில எம்.பி. அலோக் தீபங்கர், ராமேசுவரம் நகர்மன்ற தலைவர் எஸ்.அர்ச்சுனன் ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் நா.குமரன் சேதுபதி, கோயில் இணை ஆணையர் சி.செல்வராஜ், உதவிக் கோட்டப் பொறியாளர் மயில்வாகனன் ஆகியோர் செய்திருந்தனர்.
தென்மண்டல ஐ.ஜி. முருகன் நேரடி மேற்பார்வையில், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. அனந்தகுமார் சோமானி, எஸ்.பி. மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment