(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, January 12, 2016

புணரமைக்கப்படுமா இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் - கவிதை!!

No comments :

புணரமைக்கப்படுமா இராமநாதபுரம் 
புதிய(?)பேருந்து நிலையம்..?
-----------------------------------------------------------
கால் நூற்றாண்டு காணும் 
நிலையில் நம்
இராமநாதபுரம் 
பேருந்து நிலையம்...

ஆனாலும் 
அரை நூற்றாண்டு காலம்
கடந்ததாக தோன்றும் தோற்றத்தில்
மாவட்ட தலைநகரத்து 
புதிய எனும் கேள்விக்குறி போடும் 
அளவில் பிரதான
பேருந்து நிலையம்...

ஓடுதளம் என்பதே 
குண்டுகுழியாக
காட்சியளிக்கும்;
சிறு தூரல் என்றாலும் 
தெப்பக்குளம் போல கழிவுநீர் சங்கமிக்கும்;
இலவச சீறுநீர் கழிப்பிடம் 
கட்டப்பட்டும்
மடையர்களது சிறுநீரால் எழும்
துர்நாற்றம் பேருந்து நிலையத்தையே
சுகாதாரமின்மை விளங்கால்
கைதாக்கும்;



அரசியல் கட்சி,சாதிய இயக்கங்களது
மற்றும் ஆபாச சுவரொட்டிகளால்
பயணிகளது முகஞ் சுளிக்கும்;

ஆக்கிரமிப்பு சாம்ராஜ்யத்தால் 
நடந்துச் செல்வதற்கு வசதி என்பதை 
"ஆக்ரமிப்பு அகற்றம்" எனும் நாடகம் அரங்கேற்றப்படும் 
வருடத்தில் ஓரிரு நாட்களில் 
தவிர இதர நாட்களில் 
பார்த்திட இயலாது;

பேருந்து நிலைய பின்புறத்திலோ
சாக்கடைகளில் தேங்கி நிற்கும் கழிவுநீர் 
கண்ணீர் விட்டே அழும்
"எனக்கு விடுதலை எப்போ?" என்றாக...
இஃது சுகாதாரமின்மையின் 
கொடூர உச்சக்கட்டமன்றோ...!






பல வருடங்களாக பேருந்து நிலைய
தோற்றம் இதுதான்
25-
ம் ஆண்டைய வெள்ளிவிழா
காணும் புதிய(?) பேருந்து நிலையம் புதிய தோற்றம் பெறுமா? 
மாற்றம் தருமா?

ஆவலுடன் மட்டுமல்ல நம்பிக்கையுடனும் காத்திருப்போம்
இராமநாதபுரம் மாவட்ட மற்றும் 
நகராட்சி நிர்வாகம் செய்து தருமென்று..

-
அ.சேக் அப்துல்லா-

இராமநாதபுரம்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment