Thursday, January 28, 2016
ராமநாதபுரத்தில் ஜன. 30 ஆம் தேதி முதல் பிப்.3 ஆம் தேதி வரை தேசிய அளவிலான கேரம் போட்டிகள்!!
ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில்
ஜன. 30 ஆம் தேதி முதல் பிப்.3
ஆம் தேதி வரை தேசிய அளவிலான கேரம் போட்டி நடைபெற உள்ளது என
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சு.பிரசாத் புதன்கிழமை தெரிவித்தார்.
ராமநாதபுரம் இன்பென்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற
செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் மேலும் கூறியதாவது:
பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெறவுள்ள இப்போட்டிகளில் 14,17 மற்றும் 19
வயதுக்குள்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர். ஆந்திரா- 34, ஜம்மு, காஷ்மீர்- 24,
மத்தியப் பிரதேசம்- 36, மகாராஷ்டிரம்- 36, தமிழ்நாடு- 36,
சத்தீஷ்கர்- 24, குஜராத்- 23, ஹரியானா- 12,
தெலுங்கானா- 10, பாண்டிச்சேரி- 10 மற்றும் வித்தியாபாரதி அமைப்பைச் சேர்ந்தவர்கள் 24 பேர் உள்பட 259
பேர் பங்கேற்க உள்ளனர்.
தமிழக அணி வீரர்களுக்கு ஜன.21 ஆம் தேதி முதல் பயிற்சி
அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களும்
வழங்கப்படவுள்ளன.
போட்டிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
க.ஜெயக்கண்ணு தலைமையில் உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். என அவர் தெரிவித்தார்.
செய்தி : தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment