(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, January 17, 2016

ராமநாதபுரத்தில் ரூ.1.10 கோடியில் புதிய மீன் மார்க்கெட்!!

No comments :
ராமநாதபுரத்தில் ரூ.1.10 கோடியில் புதிய மீன் மார்க்கெட் அமைக்கப் படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதானமாக உள்ளது. தமிழ கத்தில் 72 சதவீதம் மீனவர்கள் ராமநாத புரம் மாவட்டத்தில் வசிக்கின்றனர்.

20 சதவீதம் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. மாவட்டத்தின் பல பகுதிகளில் பிடிபடும் மீன்கள் ராமநாதபுரம் மார்க் கெட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன. தவிர தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. 

ராமநாதபுரம் நகர், பட்டணம் காத்தான், சின்னக்கடை ஆகிய இடங் களில் மீன் மார்க்கெட்கள் உள்ளது. நெரிசல் மிகுந்த இடத்தில் நகர் மீன் மார்க்கெட் உள்ளதால் போக்கு வரத்திற்கு இடையூறு ஏற்படு
கிறது. இதனால் இந்த மீன் மார்க்கெட்டை இட மாற்றம் செய்ய நகராட்சி நிர்வாகத்திடம் மக்கள் முறையிட்டனர். புதிய மார்க்கெட்டிற்கு திட்ட மதிப்பீடு தயாரித்து தேசிய மீன் வளர்ச்சி வாரியத்திற்கு நகராட்சி நிர்வாகம் அனுப்பியது. 


புதிய மார்க்கெட் ரூ.1.10 கோடியில் உழவர் சந்தை கீரைக்கார ஊரணி மேற்கு பகுதியில் அமைகிறது. நகராட்சித் தலைவர் சந்தானலட்சுமி சேகர் கூறுகையில், ""புதிய மார்க்கெட்டில் 28 கடைகள் அமைகின்றன. மீன்கழிவு தொட்டி, குடிநீர் குழாய் அமைக்கப்படும். மத்திய அரசு ரூ.75 லட்சம், மாநில அரசு ரூ.25 லட்சம் மானியம் தருகின்றன. நகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் செலவழிக்கப்படும், என்றார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment