(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, January 21, 2016

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10.97 லட்சம் வாக்காளர்கள்: வாக்காளர் பட்டியல் வெளியீடு!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளர் சுருக்கத் திருத்தப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 10,97 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் சுருக்கத் திருத்த வாக்காளர் பட்டியலை ஆட்சியர் க.நந்தகுமார் வெளியிட்டார். பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களும் ஆட்சியரிடமிருந்து அதனைப் பெற்றுக் கொண்டனர்.

மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் விவரம் குறித்து ஆட்சியர் கூறியது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 
பரமக்குடி தொகுதியில் 2,46,166 பேரும்
திருவாடானை தொகுதியில் 2,71,962 
ராமநாதபுரம் தொகுதியில் 2,81,563 பேரும்
முதுகுளத்தூர் தொகுதியில் 2,97,492 பேரும் இடம்பெற்று உள்ளனர். 

4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சேர்த்து ஆண்கள் 5,51,194 பேர், பெண்கள் 5,45,915 பேர் உள்ளனர். மாவட்டத்தில் நிகர மொத்த வாக்காளர்கள் 10,97,183 பேர் உள்ளனர். மாவட்டத்தில் 4 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 1307 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

சுருக்கத் திருத்த வாக்காளர் பட்டியல் விபரங்கள் அனைத்து வருவாய்த்துறை அலுவலகங்கள், நகராட்சி மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் பார்வையிடலாம். தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதைப் பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அதிகாரி மு.அலிஅக்பர், அதிமுக ராமநாதபுரம் மாவட்ட செயலர் ஆர்.தர்மர், திமுக மாவட்ட துணைச் செயலர் அகமதுதம்பி, நகரச் செயலர் கார்மேகம், தேமுதிக மாவட்ட செயலர் சிங்கை.ஜின்னா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலர் அன்பு பகுருதீன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment