முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, December 29, 2015

பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாய்ப்பு!!

1 comment :
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 375 உதவிப் பொறியாளர் காலிப் பணியிடங்கள் தேர்வு மூலம் நிரப்பப்படவுள்ளன.

தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்று வெற்றி பெறுவதன் மூலம் பணியில் சேர முடியும். இந்தத் தேர்வுகள் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்பட உள்ளன.

இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்தொடரமைப்பு கழகம், மின்உற்பத்தி, மின்பகிர்மான கழகம் ஆகிய துறைகளில் உதவி என்ஜினீயர்கள் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு 2016 ஜனவரி 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத்தின் வாயிலாக இந்தத் தேர்வுகள் நடைபெற உள்ளன. பொறியியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் எழுத்துத் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தேர்வு குறித்த விவரங்களை www.tangedco.gov.in என்ற மின்சார வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

பேருந்து வசதி கேட்டு மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் மனு!!

No comments :
ராமநாதபுரம் அருகே பெரியபட்டினம் தெற்கு புதுக்குடியிருப்பு பகுதி பள்ளிக்கு செல்ல பஸ் வசதி கேட்டு மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி அலிஅக்பர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயத்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் நந்தகுமார் வழங்கினார். அப்போது அங்கு வந்த பெரியபட்டிணம் ஊராட்சி தெற்கு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கிராம தலைவர் ஆறுமுகம் தலைமையில் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். 




இதுகுறித்து பள்ளி மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் கூறியதாவது:- பெரியபட்டினம் தெற்கு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த நாங்கள் கடற்கரை பகுதியில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியை சேர்ந்த சுமார் 120 மாணவ-மாணவிகள் பெரியபட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறோம். 

எங்கள் பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள பள்ளிக்கூடத்திற்கு நாள்தோறும் நடந்து சென்று வருகிறோம். தினமும் நடந்து செல்ல வேண்டி உள்ளதால் கடும் அவதி அடைந்து வருகிறோம். எனவே, காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளிக்கூடம் சென்று வரும் வகையில் பஸ்வசதி செய்து தர வேண்டும்.

இதுதொடர்பாக பெரியபட்டினம் ஊராட்சி சார்பில் தலைவர் கபீர் மூலம் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, எங்களின் அவசிய தேவையை கருத்தில் கொண்டு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள்கூறினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து பஸ் இயக்கப்படும் என்று கலெக்டர் நந்தகுமார் மாணவ-மாணவிகளிடம் உறுதி அளித்தார்.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

TNPSC குரூப் II மற்றும் VAO தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்!!

No comments :
TNPSC குரூப் II மற்றும் VAO தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்!!



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)