முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, December 20, 2015

ராமநாதபுரத்தில் டிசம்பர் 22 ஆம் தேதி மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரம் மின்பகிர்மான கோட்ட அலுவலகத்தில் இம்மாதம் 22 ஆம் தேதி மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற இருப்பதாக மின்வாரிய செயற்பொறியாளர் எம்.ஜோசப்செல்வராஜ் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.




இக்கூட்டத்தில் ராமநாதபுரம் கோட்ட அலுவலகத்துக்கு உள்பட்ட பகுதிகளிலுள்ள  மின்நுகர்வோர், குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அவரது செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் ரூ.1.20 லட்சம் மதிப்பிலான நகை, பணம் திருட்டு!!

No comments :
ராமநாதபுரத்தில் வீட்டின் மேற்கூரை வழியாக உள்ளே இறங்கி ரூ.1.20 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். 

ராமநாதபுரம் ராணித் தோப்பு பகுதி பெரியார் நகரில் வசித்து வரும் வெள்ளையன் மகன் ராஜ்குமார் (40). இவர், வீட்டில் இல்லாத போது வீட்டின் மேற்பகுதி வழியாக உள்ளே இறங்கிய மர்ம நபர்கள், வீட்டில் இருந்த பீரோவினை உடைத்து நாலரை பவுன் தங்க நகை மற்றும்  ரூ.80 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.




திருடப்பட்ட நகை,பணத்தின் மொத்த மதிப்பு  ரூ.1.25 லட்சமாகும்.  இச்சம்பவம் தொடர்பாக, ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 12!!

No comments :
அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான (ஏஐபிஎம்டி) அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ளது.  இதற்கு விண்ணப்பிக்க ஜனவரி 12 கடைசித் தேதியாகும். அபராத கட்டணத்துடன் பிப்ரவரி10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

அரசு, அரசு உதவிபெறும், தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்பு இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடான 15 சதவீத மாணவர் சேர்க்கைக்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.


வருகிற 2016-ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு மே 1-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மூன்று மணி நேரம் நடத்தப்படும் இந்தத் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களிலிருந்து 180 கேள்விகள் கேட்கப்படும். இவை அனைத்தும் அப்ஜெக்டிவ் (கொள்குறி) வகை தேர்வு முறைக் கேள்விகளாக இருக்கும்.

இதற்கு விண்ணப்பிக்க ஜனவரி 12 கடைசித் தேதியாகும். அபராதத் தொகையுடன் விண்ணப்பிக்க பிப்ரவரி 10 கடைசித் தேதியாகும்.


இது தொடர்பான மேலும் விவரங்களை www.aipmt.nic.in என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை!!

No comments :
தமிழகத்தில் மிலாடி நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களையொட்டி 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 33 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் 24 ஆம் தேதி மிலாடி நபி, 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ், ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டு ஆகியவை வருகின்றன. இந்த 3 நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்ற குழப்பத்தில் ஆசிரியர்களும், மாணவர்களும் இருந்தனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பில், "2015-2016 ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளிக்கூட விடுமுறைகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அச்சிடப்பட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை விடுமுறைவிடப்பட்டுள்ளது.

மிலாடி நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் இந்த விடுமுறையில் அடங்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் 24, 25, 27, ஜனவரி 1 ஆம் தேதி ஆகிய 4 நாட்கள் மட்டும் நடத்தக்கூடாது. மற்ற நாட்களில் சிறப்பு வகுப்புகள் இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நடத்தப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: ஒண் இண்டியா



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)