Saturday, December 12, 2015
ராமநாதபுரத்தில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!!
ராமநாதபுரத்தில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது தொடர்பான
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலர் மு.சந்திரன்
வெள்ளிக்கிழமை கூறியது:
நகரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாலைகளிலும், பள்ளமான பகுதிகளிலும் மழை
நீர் தேங்கி நிற்கும் இடங்களைக் கண்டறிந்து நகராட்சி கழிவு நீர் ஏற்றும் டேங்கர்
லாரிகளின் மூலமாக அப்புறப்படுத்தி வருகிறோம். கழிவுநீரை தேங்க விடாமல் தொடர்ந்து
வாறுகால்கள் மூலமாகவும் அகற்றி வருகிறோம்.
நகர் முழுவதும் கொசு மருந்துப் புகையடிக்கும் பணி தொடர்ந்து
நடந்து வருகிறது. நகரில் பொது சுகாதாரத்துக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக நகரில் சுற்றித் திரிந்த பன்றிகளை பிடித்து
வருகிறோம். இதுவரையில் 40-க்கும் மேற்பட்ட பன்றிகள், பிடிக்கப்பட்டு
மாவட்டத்துக்கு வெளியே உள்ள காட்டுப் பகுதிகளில் விடப்பட்டுள்ளன.
சென்னை பாலவாக்கம் பகுதிக்கு ராமநாதபுரம் நகராட்சிப்
பணியாளர்கள் 45
பேர் குப்பைகளை அகற்றுவதற்காக 4 லாரிகளுடன் சென்றுள்ளனர். அவர்கள் பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு உள்ளிட்ட கிருமிநாசினிகளுடன் சென்று துப்புரவுப் பணியை செய்து
வருகின்றனர் என்றார்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ஈட்டி - தமிழ் திரை விமர்சனம்!!
அதர்வா – ஸ்ரீதிவ்யா முதன்முதலாக
ஜோடி சேர்ந்து நடிக்க குளோபல் இன்போடைன்மென்ட் பி. லிட் எஸ்.மைக்கேல் ராயப்பன்
தயாரிப்பில்.,
இயக்குனர் வெற்றி மாறனின் உதவியாளர் ரவி அரசு இயக்கத்தில்
வெளிவந்திருக்கும் படம் தான் “ஈட்டி” .
ஸ்போர்ட்ஸில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தஞ்சாவூர்
பகுதி கல்லூரி மாணவர் அதர்வா., அவரிடம், சென்னை பொண்ணு ஸ்ரீதிவ்யா ஒரு ராங் – கால் ரவுடிதனத்தால்
வகையாக சிக்கிக்கொள்ள.,
இருவரும் போனிலேயே, உடன் இருக்கும்
நண்பர்களும்,
படம் பார்க்கும் ரசிகர்களும் பொறாமை படுமளவிற்கு படு
பயங்கரமாக கடலை வறுக்கின்றனர்.
இந்நிலையில்., அதர்வா, தன் அத்தலட்டிக் விளையாட்டு போட்டிகள் விஷயமாக சக வீரர்கள் மற்றும் கோச்
ஆடுகளம் நரேனுடன் சென்னை வருகிறார். வந்த இடத்தில் வந்த வேலையை மட்டும்
பார்க்காமல்.,
சேலையை, தன் காதல் சோலையைத்
தேடிக் கிளம்ப.,
அதனால் அவர் சென்னையையே கலக்கும் கள்ள நோட்டு கும்பலுக்கு
விரோதியாகிறார். இறுதியில் தடை பல கடந்து, வில்லன்களையும், விளையாட்டிலும் வென்று., ஸ்ரீதிவ்யாவின் கரம்
பற்றினாரா?
இல்லையா..? என்பது தான் “ஈட்டி”
படத்தின் நீட்டி முழக்கும் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக் கதை.
அதர்வா, புகழேந்தியாக அத்தலட்டிக்
ஸ்போர்ட்ஸ் வீரராக.,
நிறைய ஹோம் ஒர்க்குகள், ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள்
எல்லாம் செய்து ஒரு ஓட்ட பந்தய வீரராக நடிக்கவில்லை, அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், சிறு வயது முதலே த்ராம்ப ஸ்தீனியா எனப்படும் அடிபட்ட இடத்தில் இரத்தம்
நிற்காமல் ஒழுகிக் கொண்டே இருக்கும் வியாதியுடைய ஒருவரால் இத்தனை பெரிய
ஸ்போர்ட்ஸ்மேனாக வர முடியுமா? என்னும் கேள்விக்கு
இயக்குனர் தான் பதில் சொல்ல வேண்டும் .
மற்றபடி அதர்வா .,ஸ்ரீதிவ்யாவுடனான காதல்
காட்சிகளிலும் சரி,
ஆர் என் ஆர்.மனோகர் உள்ளிட்ட வில்லன்களுடனான மோதலிலும், தடகள பந்தய ஓட்டங்களிலும் சரி., இப்பட டைட்டிலுக்கு
ஏற்பவே ஈட்டியாக பாய்ந்து,
பறந்து நடித்து பலே, பலே.. சொல்ல
வைத்திருக்கிறார்.
ஸ்ரீதிவ்யா, காயத்ரியாக இன்னசென்ட்
சென்னை கல்லூரி மாணவியாக.,
கண்டபடி போனில் அதர்வாவை ராங் – கால் போட்டு திட்டிவிட்டு பின், அதர்வாவின் மிரட்டலுக்கு
பயந்து அடிக்கடி அவர் போனுக்கு ரீ-சார்ஜ் செய்வதும், அதன் பின் இருவரும் காதல் வலையில் வீழ்வதும் சினிமாடிக்காக இருந்தாலும்
சிறப்பாக இருக்கிறது ஸ்ரீ திவ்யாவின் நடிப்பில்.
அதர்வாவின் கோச்சாக வரும் ஆடுகளம் நரேன், அப்பா ஜெயபிரகாஷ்,
ஸ்ரீதிவ்யாவின் அப்பா அழகம்பெருமாள், அண்ணன் போலீஸ் அதிகாரி செல்வா, ஒயிட் & ஒயிட் வில்லன் ஆர் என் ஆர்.மனோகர், நண்பர்கள் கும்கி அஸ்வின், முருகதாஸ் உள்ளிட்டோரும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில்
நடித்திருக்கின்றனர். அதிலும் கோச் நரேன்., ‘நீ பெற இருக்கும்
வெற்றி உன் சந்தோஷம் மட்டுமல்ல.. உங்கப்பாவின் கனவு, எனது லட்சியம்…’
என அதர்வாவை உசுப்பேற்றி உசுப்பேற்றி ஒரு சிறந்த
ஓட்டப்பந்தய வீரராக்குவது மூலம் பிரமாதமான ரடிப்பை வழங்கி இருக்கிறார்.
ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் ‘பஞ்சு மிட்டாய்…’
‘குய்யோ முய்யோ….’ உள்ளிட்ட பாடல்கள்
தாளம் போட வைக்கும் ரகம்.
சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவில் படத்தில் அடிக்கடி
வரும்தஞ்சை கோபுரமும் சென்னை நகரமும்… மாதிரியே படமும், இப்பட பாத்திரங்களும் பிரகாசம். ராஜா முகம்மதுவின் படத்தொகுப்பும் பக்கா!
‘திறமைங்கறது கடின பயிற்சி தான்..’ ‘என் பையன்
இந்தியாவுல ஜெயிக்கிறது முக்கியமல்ல.. இந்தியாவுக்காக ஜெயிக்கிறது தான் முக்கியம்…’ உள்ளிட்ட வசனங்களில் கவனிக்க வைத்த இப்பட இயக்குனர் ரவி அரசு., வெறும் இன்ஸிடண்ட்டுகளை மட்டுமே கவனத்தில் கொண்டு., இண்டர்வெல்லுக்கு அப்புறமும் கதையில் கவனம் செலுத்தாது, காதல் காட்சிகளிலும்,
இன்னும் பிற காமெடி சீன்களிலும் கவனம் செலுத்தி இருப்பதும், க்ளைமாக்ஸில் ஹீரோ,
திடீர் போலீஸ் ஆபிஸர் ஆவதும் சற்றே கொட்டாவி விட வைக்கிறது.
மற்றபடி, ‘ஈட்டி – சுட்டி!’
விமர்சனம்: கலக்கல் சினிமா
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)