முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, December 11, 2015

கிருஸ்துமஸ், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்!!

No comments :
கிருஸ்துமஸ், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பயணிகள் நெரிசலை தவிர்க்க செங்கல்பட்டில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராமேஸ்வரத்தில் இருந்து டிசம்பர் 25, ஜனவரி1, 8 தேதிகளில் வெள்ளிக்கிழமை பகல் 2.30 மணிக்கு புறப்படும் வாரந்திர சிறப்பு ரயில்(06140) மறுநாள் அதிகாலை 3 மணிக்கு செங்கல்பட்டு போய்ச்சேரும்.



செங்கல்பட்டில் இருந்து டிசம்பர் 26, ஜனவரி 2, 9 தேதிகளில் சனிக்கிழமை பகல் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(06141) அதிகாலை 2.15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.

இந்த ரயில் மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை வழியாகச் செல்லும்.


இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. பிரயாணிகள் பயன்மடுத்திக்கொள்ளவும்.

செய்தி: ஒண் இண்டியா


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)