Thursday, December 10, 2015
இனி 24 மணி நேரமும் ஹலோ போலீஸ் சேவை!!
இராமநாதபுரத்தில் 12 மணிநேரம்
செயல்பட்டுவந்த ஹலோ போலீஸ் சேவை இப்போது 24 மணி நேரமாக
நீட்டிப்பு.
மாவட்டத்தில் நடைபெறும் சமூக விரோத செயல்கள் கஞ்சா,மணல்,போலி லாட்டரி,பெண்களை கேலி செய்தல்,
கந்துவட்டி,ரவுடிதனம்,போன்ற செயல்களைதடுப்பதற்க்காகவும் ஹலோ போலீஸ் என்ற சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
நேற்று முதல் அனைத்து காவல் நிலையங்களிலும் பகல் மற்றும்
இரவு நேரங்களில் தலா இரண்டு போலீசார் பணியில் உள்ளனர்.
83000-31100
என்ற எண்ணுக்கு பொதுமக்கள் எந்த நேரமும் தகவல்
தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளர்.
செய்தி: திரு.தாஹிர், கீழக்கரை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் மாவட்ட ஈர நெஞ்சங்கள் - குவிந்து வரும் வெள்ள நிவாரணப் பொருட்கள்!!
சென்னை,கடலூரில் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏராளமானோர் கொடுத்த நிவாரணப் பொருட்கள் ராமநாதபுரம்
மாவட்ட நிர்வாகத்திடம் குவிந்து வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் உத்தரவின்பேரில்
மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஊரக
வளர்ச்சித் துறை திருமண மண்டபத்தில் வெள்ள நிவாரணத்துக்காக வழங்கப்படும் பொருள்கள்
பெற்றுக் கொள்ளப்படும் என அறிவித்திருந்தனர்.
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து
தரப்பினரும் நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பழனி
கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சேகரிக்கப்பட்ட
ரூ.75 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரணப் பொருள்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு
வழங்கப்படவிருக்கின்றன என்றார் அவர்.
ராமநாதபுரம் நேஷனல் அகாதெமி மெட்ரிக் மற்றும் நேஷனல்
அகாதெமி ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள் அமைப்பான நாசாவின் சார்பில்
ரூ.15லட்சம் மதிப்புள்ள பொருள்களும், ராமநாதபுரம் டி.டி.வி.
மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்களும், ரியல் எஸ்டேட் தொழில்
செய்து வரும் நண்பர்கள் அமைப்பின் சார்பில் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருள்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன.
மானாமதுரை:மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லியம்மன், சோமநாதர் சுவாமி கோயில் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் சேகரிக்கப்பட்ட வெள்ள
நிவாரணப் பொருள்கள் கடலூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன.
செய்தி: தினசரிகள்
வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு இலவசமாக நகல்கள் வழங்க சிறப்பு முகாம்!!
அண்மையில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சான்றிதழ்களை
இழந்தவர்களுக்கு இலவசமாக நகல்கள் வழங்க அரசு சார்பில் வரும் 14ம் தேதி முதல் 2
வாரங்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
பள்ளிக்கல்வி இயக்குனர் ச. கண்ணப்பன் அனைத்து மாவட்ட
முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில் அவர்
கூறியிருப்பதாவது,
சமீபத்தில் பெய்த கன மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தும் முதலமைச்சர் ஜெயலலிதா வெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் தங்களது கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் இழந்துள்ளனர் என தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதை தொடர்ந்து மேற்சொன்ன ஆவணங்களை இழந்துள்ள மாணவர்களுக்கு அவற்றின் நகல்களை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் பெய்த கன மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தும் முதலமைச்சர் ஜெயலலிதா வெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் தங்களது கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் இழந்துள்ளனர் என தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதை தொடர்ந்து மேற்சொன்ன ஆவணங்களை இழந்துள்ள மாணவர்களுக்கு அவற்றின் நகல்களை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க சென்னை, திருவள்ளூர்,
காஞ்சீபுரம், கடலூர் உள்ளிட்ட
வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் வெள்ளத்தின் காரணமாக கல்விச்
சான்றிதழ்களை இழந்துள்ள பொதுமக்களுக்கு விண்ணப்பத்தின் பேரில் அவற்றின் நகல்களை
அவர்களுக்கு உடனடியாக வழங்குவதற்கு வருகின்ற 14-ந்தேதி முதல் 2 வாரங்களுக்கு அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் சிறப்பு முகாம் நடத்திடவும், உரிய வழிமுறைகளை பின்பற்றி ஒரு வாரத்திற்குள்ளாக கல்வி சான்றிதழ்களின் நகல்களை
உரியவர்களுக்கு கட்டணமின்றி வழங்கிடவும் அரசு ஆணையிட்டுள்ளது. 8, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் உட்பட அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால்
நடத்தப்பட்டுவரும் அனைத்துத் தேர்வுகளின் சார்பாக வழங்கப்பட்டு, வெள்ள பாதிப்பின் காரணமாக இழக்கப்பட்டுள்ள மதிப்பெண்/ பட்டயச் சான்றிதழ்களுக்கு
தனித்தனியாக பொதுமக்களிடமிருந்து கட்டணம் ஏதுமின்றி இத்துடன் இணைக்கப்பட்டுள்ள
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பெற்று, அரசுத் தேர்வுகள்
இயக்ககத்திற்கு அனுப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ள, சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட
முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்க வேண்டும்.
சிறப்பு முகாம் அமைக்கப்பட உள்ள பள்ளிகளில் இப்பணிக்காக தனி
அலுவலர்கள் நியமனம் செய்திட வேண்டும். ஒவ்வொரு நாளும் பெறப்படும் பூர்த்தி செய்த
விண்ணப்பங்களை தேர்வு வாரியாக தொகுத்து, பட்டியலிட்டு, பெறப்பட்ட விண்ணப்பங்களை உரிய மாவட்டக் கல்வி அலுவலர்களது மேலொப்பத்துடன்
சென்னை-6,
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும்.
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தை சார்ந்த அலுவலர்கள் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, மறுபிரதி சான்றிதழ்களை உரிய முகாம்களில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலமாக
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்குவர்.
10-ஆம் வகுப்பிற்கு கீழ் உள்ள வகுப்புகளுக்கு மாற்று சான்றிதழ் மற்றும் இதர
சான்றிதழ்களுக்கு பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று அதனை பள்ளிகளில் உள்ள
ஆவணங்களுடன் சரிபார்த்து எவ்வித கட்டணமுமின்றி வழங்க அந்ததந்த பள்ளித்
தலைமையாசிரியர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும் என்று அவர்
அதில் தெரிவித்துள்ளார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)