முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, December 8, 2015

கீழக்கரை அருகே பேருந்து விபத்து, பலர் காயம்!!

No comments :

இராமேஸ்வரத்திலிருந்து பாபநாசம் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து காஞ்சிரங்குடி அருகே உள்ள பாலையாறு கம்மாய்க்குள் 40 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் கவிழ்ந்தது.

இதில் 70 பேர் பயணம் செய்தனர் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர் மற்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.



உடனே தகவலறிந்து வந்த கீழக்கரை காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்தனர். பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் காயமடைந்த பயணிகளை மீட்டு கீழக்கரை அரசு பொது மருத்துவமனைக்கும், ராமநாதபுரம் அரசு பொது மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர் .

இதனை அடுத்து தீயனைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் கீரேன் உதவியுடன் பேருந்தை அப்புற படுத்த போராடி வருகின்றனர்.


செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)