முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, November 29, 2015

சவுதியில் பணிபுரிய மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசுஅயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்!!

No comments :
சவுதியில் டாக்டராக பணிபுரிய விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

கலெக்டர் நந்தகுமார் கூறியதாவது:

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் சவுதிஅரேபியா ஜெத்தாவில் முன்னணி தனியார் மருத்துவமனைக்கு பல் மருத்துவம் தவிர மற்ற துறை கண்சல்டன்டுகள், சிறப்பு டாக்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.



இரண்டு ஆண்டு பணி அனுபவம், 50 வயதிற்குட் பட்டவராக இருத்தல் வேண்டும். டாக்டருக்கு ரூ.4.25 லட்சம் முதல் ரூ.5.10 லட்சம் வரையும், சிறப்பு டாக்டருக்கு ரூ.2.89 லட்சம் முதல் ரூ.3.91 லட்சம் வரை மாத ஊதியமாக நிர்ணயிக்கப்படும். 

இலவச விசா, குடும்ப விசா, இருப்பிடம், இதர சலுகைகள் உண்டு. விபரங்களுக்கு 044 22502267 ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

துபாயில் சொக்க வைக்கும் மிராக்ல் கார்டன் - வண்ணப்பூந்தோட்டம்!!

No comments :
வளைகுடா என்றதும் பலருக்கு நீண்ட பாலைவனம் நினைவுக்கு வரும் ஆனால் மலர்களும்மரங்களும் நினைவிற்கு வரும் வகையில் வளைகுடா நாடுகளின் நகரங்களில் ஒன்றான துபாயில் மரம்செடிகளோடு இயற்கை சூழலை உருவாக்க முயற்சிகள் பல மேற்கொண்டு இது குளிர் பிரதேசமா என நினைக்க செய்யும் வகையில் அழகிய‌ தோட்டங்களை உருவாக்குகின்றனர்.



இந்நிலையில் 2013ம் வருடம் சுமார் 72,000 சதுர அடி பரப்பளவில் வித விதமான‌ பூக்களைக்கொண்டு மிராக்கிள் கார்டன் என்ற பெயரில் துபாயில் பிரம்மாண்ட பூந்தோட்டம் உருவாக்கப்பட்டு மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது. கோடை காலத்தையோட்டி தற்காலிகமாக மூடப்பட்ட துபாயில் உள்ள பிரம்மாண்ட மலர் பூங்கா நேற்று மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. இதற்கான துவக்க நிகழ்ச்சி பூங்கா அரங்கில் நடைபெற்றது. முதல் நாளிலேயே ஏராளமானோர் குவிந்தனர். இப்பூங்கா வருடத்தில் ஆறுமாத காலம் செயல்படும்.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 4.5 கோடிக்கும் மேற்பட்ட மலர்களோடு இப்பூங்கா ஏற்படுத்தப்பட்டு பல்வேறு அழகிய வடிவங்களோடு மலர் அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளது. சென்ற வருடம் லட்சக்கணக்கான மக்கள் இப்பூங்காவிற்கு வருகை தந்து பூக்களை ரசித்து சென்றனர். உலகின் மிகப்பெரிய மலர் பூங்காக்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

பூங்கா நேரம்: காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

தமாஷா - ஹிந்தி திரை விமர்சனம்!!

No comments :
இயக்குநர் இம்டியாஸ் அலியுடன் ரன்பிர் கபூரின் இரண்டாவது இன்னிங்ஸ் தான் தமாஷா. புரிதலுடன் தீபிகா படுகோன், புதிருடன் ரன்பின் கபூர் இவர்களுக்கு இடையேயான காதலில் சதமடிக்கும் காட்சிகளின் கோர்வையே தமாஷாபடம்.

சிம்லாவில் பிறந்து வளரும் நாயகன் ரன்பிர் கபூர் (வேத்), சிறுவயதிலிருந்தே புராணக் கதைகள் கேட்டே வளர்கிறார். கொல்கத்தாவைச் சேர்ந்தவர் தாரா (தீபிகா). இவர்கள் இருவரும் பிரான்ஸ் நாட்டின் கொர்சிகாவில் சந்திக்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே பாஸ்போர்ட்டை இழந்துவிட்டு அழுகாச்சி பெண்ணாகவே அறிமுகமாகியார் தீபிகா. இருவரும் பேசிப் பழகுகிறார்கள். கொர்சிகாவில் நடக்கும் காட்சிகளில் இருவரும் ஹிந்தி பட டயலாக்குகளால் தெறிக்கவிடுகிறார்கள்.

இந்தியா திரும்பும் தீபிகா, ரன்பிர்கபூருடன் இருந்த நாட்களை நினைத்து அவர் மேல் காதலில் விழுகிறார். ரன்பிர் டில்லியில் இருப்பதைத் தெரிந்து சந்திக்கச் செல்கிறார். இருவரும் காதலிக்கவும் ஆரம்பித்துவிடுகிறார்கள்.
தான் விரும்பும் எந்த ஒரு விஷயத்தையும் செய்ய முடியாமல் இந்த சமுதாயத்திற்காக தன்னை மாற்றிக்கொண்டு டில்லியில் வாழ்கிறார் ரன்பிர்கபூர்.  கொர்சிகாவில் பார்த்த ரன்பிர்கபூராக இப்போது இல்லையென்று அவன் மேல் ஆதங்கப்படுகிறார் தீபிகா. இருவருக்கும் இடையே சண்டையும் வருகிறது. அதன்பின் ரன்பிர்கபூருடனான காதல் கைசேர்ந்ததா என்பதே மீதிக் கதை.

சில காட்சிகளில் சுவரோவியங்கள் காட்சியை நிறைக்கின்றன. ஒவ்வொரு ஓவியமும் தனித்தனியே கதை சொல்லிச் செல்வது படத்தின் காட்சிக்கு மேலும் அழகு சேர்க்கிறது.

இந்தியின் ஹிட் படமான பர்ஃபியில் நடித்த ரன்பிர்கபூரை மீண்டும் திரையில் ஒருமுறை கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர் இம்டியாஸ் அலி. ஜாலியான பையனாக இருக்க நினைக்கும் ரன்பிர், சமுதாயத்திற்காகவும், தன் அப்பாவுக்காகவும், தனக்குப் பிடிக்காத விஷயங்களைச் செய்துவரும் காட்சிகள், அதனால் ஏற்படும் மன அழுத்தம், தீபிகாவிடம் கோபத்தில் பேசும் இடமென்று அனைத்து இடங்களிலும் சிக்ஸர்களை விளாசுகிறார்.

ஒளிப்பதிவும், இசையும் இந்தப் படத்தின் ஸ்பெஷல் விஷயங்கள். படத்தின் லைட்டிங் மற்றும் கேமரா வேலைகளில் இந்தப் படத்திலும் வெரைட்டி காட்டியிருக்கிறார் ரவிவர்மன்.
படத்தின் பின்னணி மற்றும் பாடல்கள், படம் மெதுவாக நகரும் போதெல்லாம் கைகொடுத்து காப்பாற்றுவது போல அமைந்திருக்கிறது. இருப்பினும் காதலர்களுக்காக இன்னும் சில பாடல்களை டெடிகேட் செய்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தனி சல்யூட். 

ரன்பிர் கபூரும் தீபிகாவும் இணைந்து நடித்த ஏக் திவானி ஹய் ஜவானி படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு முறை இருவரின் வேதியியல் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

இப்படத்தில் காதலை மட்டும் சொல்லாமல், காதலிலும், வாழ்க்கையிலும் நமக்கு என்ன பிடிக்குமோ அதைத் தான் செய்யணும், பிடிக்காத வாழ்க்கை நிச்சயம் நரகத்திற்குச் சமம் என்பதைக் கதையில் சொல்லிச் செல்கிறார் இயக்குநர்.

மொத்தத்தில் தமாஷா - மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டுத் தேடும் காதலர்களை  மையப்படுத்திய அழகான காதல் படம்!

விகடன் விமர்சனம்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

தமிழக முதல்வரால் சமூக நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

No comments :
தமிழக முதல்வரால் சமூக நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. விருதுக்கான விண்ணப்பங்கள் மற்றும் விபரம் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.


பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து நவ., 30 க்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.


விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானது அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என, கலெக்டர் நந்தகுமார் தெரிவித்தார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)