Thursday, November 19, 2015
ராமநாதபுரத்தில் காசோலைகளில் போலியாக கையெழுத்திட்டு ரூ.1.60 லட்சம் மோசடி!!
காசோலைகளில் போலியாக கையெழுத்திட்டு ரூ.1.60 லட்சம் மோசடி செய்ததாக வங்கிக் கிளை மேலாளர்கள் இருவர் உள்பட 7 பேர் மீது ராமநாதபுரம் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
ராமநாதபுரம் அருகே என். மனங்கொண்டான் பள்ளிவாசல் தெருவைச்
சேர்ந்த காதர் என்ற அன்வர் அலி மகன் அப்துல்சலாம். இவர் ராமநாதபுரத்தில் உள்ள இரு
வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தார்.
இந்த இரு வங்கிக் கிளைகளிலும் தனது
காசோலையில் போலியாக கையெழுத்திட்டு ரூ.1.60 லட்சத்தை மோசடி
செய்ததாக வங்கிக் கிளை மேலாளர்கள் பாலாஜி, ராஜா உள்ளிட்ட 7
பேர் மீது ராமநாதபுரம் எஸ்.பி. மணிவண்ணனிடம் அப்துல்சலாம்
புகார் செய்தார்.
ராமநாதபுரம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்த நாகூர் பிச்சை மகன்
ஹமீது இப்ராகிம்,
ராமநாதபுரம் தர்ப்ப சயன சாலையைச் சேர்ந்த ஹச்முகைதீன் மகன்
பஷீர் அகமது,
முகம்மது ரபீக், ஹச் மைதீன், பரமக்குடியைச் சேர்ந்த காதர் இப்ராகிம் ஆகியோர் மீதும் அவர் குற்றம்
சாட்டியுள்ளார்.
இந்த புகாரின் பேரில், வங்கி மேலாளர்கள் இருவர் உள்பட 7 பேர் மீதும் ராமநாதபுரம்
மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரத்தில் டிச.2 ஆம் தேதி ஊர்காவல்படை தேர்வு!!
ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் வரும் டிச.2 ஆம் தேதி ஊர்காவல்படைக்கு ஆள்கள் தேர்வு நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன்
புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஊர்க்காவல் படையில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு வரும்
டிசம்பர் 2
ஆம் தேதி காலை 9 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை
மைதானத்தில் ஆள்கள் தேர்வு நடைபெறவுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்பட்ட
பகுதிகளில் வாழும் 18
வயதுக்கு மேற்பட்ட மற்றும் 45 வயதுக்கு உட்பட்ட நல்ல உடற்தகுதி உடைய இருபாலாரும் கலந்து கொள்ளலாம்.
10
ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
ஊர்க்காவல் படையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தேர்வில் கலந்து கொள்ள வரும்
போது மாற்றுச்சான்றிதழ்,
மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ் மற்றும்
இரு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் நேரில் ஆஜராகுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)