Wednesday, November 18, 2015
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டெலிகாம் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!!
தொலைதொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில்
டெலிகாம் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணியிடங்கள் காலியாகவுள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு எஸ்சி, எஸ்டி,
ஓபிசி பிரிவினர் டிசம்பர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம் என பிஎஸ்என்எல் அறிவுறுத்தியுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 147 இடங்கள் காலியாகவுள்ளன. இதில்
இந்தப் பணியிடங்களுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 147 இடங்கள் காலியாகவுள்ளன. இதில்
எஸ்சி பிரிவுக்கு 25-ம்,
எஸ்டி பிரிவுக்கு 77-ம்,
ஓபிசி பிரிவுக்கு 45-ம் வழங்கப்படும்.
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற மத்திய அரசு, மாநில அரசு தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட்டிலிருந்து 3 ஆண்டு என்ஜினீயரிங் டிப்ளமோ படித்து முடித்திருக்கவேண்டும். வயது 18 முதல் 30-க்குள் இருக்கவேண்டும். நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம்
ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் டிசம்பர் 1-ம் தேதி முதல் 10-ம் தேதிக்குள் அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு www.bsnl.co.in -ல் தெர்ந்துகொள்ளலாம்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
கீழக்கரையில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மின் சாதனங்கள் பழுது, பொதுமக்கள் புகார்!!
கீழக்கரையில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மின்
சாதனங்களில் பழுது ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த சில மாதங்களுக்கு
முன்பு, பல லட்ச ரூபாய் செலவில் புதிய மின் மாற்றிகள்
அமைக்கப்பட்டன. மேலும் பழைய மின்கம்பங்கள் உயர் அழுத்த மின்கம்பிகள் போன்றவை
புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
இருப்பினும் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு பலமணி
நேரம் மின்தடை ஏற்படுகிறது. கடந்த சில வாரங்களாக தினமும் குறைந்தது 10 முறை மின்தடை ஏற்படுகிறது. பிறகு ஒரு சில நிமிடங்களிலேயே மீண்டும் மின்
இணைப்பு கிடைக்கிறது. அடிக்கடி ஏற்படும் இந்த மின்தடை காரணமாக குளிர்சாதன பெட்டி, மிக்சி,
கிரைண்டர் போன்ற மின் சாதனங்கள் பழுதடைந்துவிடுவதாக
பொதுமக்கள் தெரிவித்தனர்.
எனவே கீழக்கரையில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை சீர்
செய்யுமாறு மின்வாரியத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
பெரியபட்டினத்தில் வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை!!
பெரியபட்டினத்தில் வீட்டின்
கதவை உடைத்து 30
பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.
தடயத்தை மறைக்க வீட்டுக்குள் மிளகாய் பொடியை தூவியிருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ள பெரியபட்டினம்
காயிதேமில்லத் நகரை சேர்ந்தவர் சேகுமுகைதீன் (43). இவர் வெளிநாட்டில்
வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாத்திமாபீவி (35). இவர்,
திங்கள்கிழமை இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு தனது உறவினர்
வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் செவ்வாய்கிழமை காலை அவர் தனது வீட்டிற்கு
திரும்பினார். அப்போது வீட்டின் பின்புற வாசல் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு
அதிர்ச்சியடைந்தார்.
வீட்டில் பீரோவில் இருந்த ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள 30
பவுன் நகைகள் மற்றும் ரூ.2,500 ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து அவர்
திருப்புல்லாணி காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், துணை கண்கானிப்பாளர் முத்துராலிங்கம் தலைமையில், ஆய்வாளர் ஆனந்த்,
உதவி ஆய்வாளர் ஜேசுதாஸ் ஆகியோர் சம்பவம் நடந்த வீட்டில்
ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் சோதனை மேற்கொண்டதில், வீட்டின் பெரும் பகுதியில் அடையாளம் காண இயலாதவாறு மர்ம நபர்கள் மிளகாய்
பொடியைத் தூவிச் சென்றுள்ளது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக கீழக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து
தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)